| றகைகொண்ட வேனலுட் டாழ்குர லுரீஇ முகைவளர் சாந்துரன் முத்தார் மருப்பின் வகைசா லுலக்கை வயின்வயி னோச்சிப் பகையினோய் செய்தான் பயமலை யேத்தி யகவினம் பாடுவா நாம்; |
8 | ஆய்நுதலணிகூந்த லம்ணைத் தடமென்றோட் டேனாறு கதுப்பினாயானுமொன் றேத்துகு வேய்நரல் விடரக நீயொன்றபாடித்தை; |
11 | கொடிச்சியர்கூப்பி வரைதொழு கைபோ லெடுத்த நறவின் குலையலங்காந்தட் டொடுத்ததேன் சோரத் தயங்குந்தன்னுற்றே ரிடுக்கண் டவிர்ப்பான் மலை; |
15 | கல்லாக்கடுவன் கணமலி சுற்றத்து மெல்விரன் மந்திகுறைகூறுஞ் செம்மற்றே தொல்லெழி றோய்ந்தார்தொலையி னவரினு மல்லற் படுவான் மலை; |
19 | புரிவிரிபுதைதுதை பூத்ததைந்த தாழ்சினைத் தளிரன்ன வெழின்மேனிதகைவாட நோய்செய்தா னருவரை யடுக்கநா மழித்தொன்று பாடுவாம்; |
22 | விண்டோய்வரைப்பந் தெறிந்த வயரவிடத் தண்டா ழருவியரமகளி ராடுபவே பெண்டிர் நலம்வௌவித் தண்சாரற்றாதுண்ணும் வண்டிற் றுறப்பான் மலை; |
26 | ஒடுங்காவெழில்வேழம் வீழ்பிடிக் குற்ற கடுஞ்சூல் வயாவிற்கமர்ந்து நெடுஞ்சினைத் தீங்கட் கரும்பின்கழைவாங்கு முற்றாரி னீங்கல மென்பான் மலை; எனநாம்; |
31 | தன்மலைபாட நயவந்து கேட்டருளி மெய்ம்மலி புவகையன்புகுதந்தான் புணர்ந்தாரா மென்முலை யாகங் கவின்பெறச் செம்மலை யாகிய மலைகிழ வோனே. |