வெண்பா மருங்கினு, மூவகை யடியு முளைத்த தலிலவே'' (1) என்பதனுள் முன்னுதலில் என்றதனல் நாற்சீரும் அறுசீருமாகிய மூன்றடியானும் வரும் முடுகியலோடு விராய்த் தொடர்ந்து ஒன்றாய்க் கலிக்குறுப்பாய் வரும் ஆசிரி யமும் வெண்பாவும் உளவென்று கொள்க: என்றலின், 'நெறியறி.................முந்துறீஇ' என அறுசீரடி முடுகியலும் 'தகைமிகு.......................மாக' என ஐஞ்சீரடி முடுகியலும் 1விராய ஆசிரியச்சுரிதகம் வந்தது. ''முச்சீர் முரற்கையு ணிறையவுநிற்கும்'' (2) என்பதனான், 'நின்கண்ணாற்காண்பென்மன்யான்' என மூச்சீரடியும் வந்தது. (3) (40) அகவினம் பாடுவாந் தோழி யமர்க்க ணகைமொழி நல்லவர் நாணு நிலைபோற்
ணின்றது கூன். 'சிறுகுடியீரே.......................தொழுகலான்.' இதனுள் முதல் ஆசிரியவடி. 'காந்தள்............கோல்' இவைமூன்றுங் கொச்சகமெனப்படும். 'எனவாங்கு'. தனிச்சொல். 'அறத்தொடு..................யாய்' இது வெள்ளைச் சுரிதகம். 'அவருந்..........காண்'. இவையிரண்டுங் கொச்சகம் 'நல்லாய்'. தனிச்சொல். 'நன்னாட்டலைவரு................................தனர்கொல்'. இது பேரெண். ‘புனவேங்கை..................மற்கொலோ'. இவையிரண்டுந் தாழிசை. 'மைதவழ்..............கண்ணாகுமோ' தனிச்சொல். 'நெறியறி............வினியே' இதுசுரிதகம். இதனுள்முதலடி அறுசீர்முடுகியல். இரண்டாவது ஐஞ்சீர் முடுகியல். இவ்வாறு வருவன கொச்சகக் கலிப்பாவெனப்படும்'' தொல். செய். சூ. 147. இளம். 'தரவும் போக்கும்' (இ) ''வேட்கைத் தோற்றத் தலைமகனில்லாதவழித் தோழிகூற்றுநிகழும்; அது 'காமர் கடும்புனல்' என்னும் பாட்டினுட்காண்க' தொல். பொருளி.சூ. 13. இளம். (ஈ) ''காமர்கடும்புனல்...................டாடுவாளென்னுங் கொச்சகக்கலியுள்ளும் நேரீற்றியற்சீர் வந்தது'' யா - வி. சூ. 15. (உ) ''காமர்............டாடுவாளென்னும் மயங்கிசைக் கொச்சகக்கலிப்பாவினுள் வெண்பாவும் ஆசிரியப்பாவும் மயங்கிவந்தன'' யா - வி. சூ. 30; யா- கா. ஒழிபியல், 4, இ - வி. சூ. 745. (ஊ) ''காமர்கடும்புனல்...........................பொலிகமாவினியே'. இது வெள்ளைபலவும் மயங்கி ஆசிரியவடியும் விரவி வந்தமையால் அயன்மயங்கிசைக் கொச்சக்கலிப்பா; இதன் முதற்கண் நேரீற்றியற்சீர் வந்தவாறு கண்டுகொள்க''. யா - வி. சூ. 86. (எ) ''வெண்பாவினோடும் ஆசிரியத்தனோடும்வந்தமயங்கிசைக் கொச்சகக் கலிப்பா 'காமர்கடும்புனல்........................டாடுவாள்' என்னும் பழம்பாட்டு முதலாயின'' யா - கா. செய். 12. 1. தொல். செய். சூ. 67. 2. தொல். செய். சூ. 70. (பிரதிபேதம்) 1 விராய் ஆசிரியச்.
|