230

இது தோழியுந் தலைமகளுந் தலைமகனது மலையை வாழ்த்திப் பாடுகின்ற 1வள்ளைப்பாட்டில், தோழி இயற்பட மொழியத் தலைமகள் இயற்பழித்தமை, தலைமகன் சிறைப்புறமாகக் கேட்டு வரையவருகின்றமை, தோழி தலைமகட்கு உரைத்தது.

இதன் பொருள்.

அகவினம் பாடுவாந் தோழியமர்க்க
ணகைமொழி (1) நல்லவர் நாணு நிலைபோற்
றகைகொண்ட வேனலுட் டாழ்குர லுரீஇ
முகைவளர் (2) சாந்துரன் முத்தார் (3) மருப்பின்
வகைசா (4) லுலக்கை வயின்வயி னோச்சிப்
(5) பகையினோய் செய்தான் பயமலை யேத்தி
யகவினம் பாடுவா நாம

எ - து : தோழீ ! நங் கருத்திற்கு வேண்டியவாறெல்லாம் அழைத்தே மாய்ப் பாடக்கடவேமெனத் தோழி 2கூற, அதுகேட்ட தலைவி அழகுகொண்ட தினைப்புனத்தில் (6) 3முகத்திற்குப் பொருந்தின கண்ணினையும் மகிழ்ச்சியைத் தரும் மொழியினையுமுடைய நல்ல மகளிர், நாணி இறைஞ்சும் நிலைபோல முற்றித்தாழந்தகதிரைஉருவி அரும்புவளர்ந்த சந்தனமரத்தாற்செய்த உரலிலே பெய்து, (7) முத்துநிறைந்த யானைக்கொம்பால் வகுத்த நிறைந்த உலக்கையை


1. (அ) ''புன்கதிர், கையுறு முவகையாற் பணியுங் கற்பினோர், மெய்யுறு பரிவென விளைந்து சாய்ந்தவே'' கந்த. திருநாட்டு. 20. (ஆ) ''கற்பின் மகளிர்போ லொசிந்த தன்றே'' திருவிளை. திருநாட்டு. 24. (இ) ''மங்கைமையின் மிகநாணு, மாதரைப்போற்........................கதிர்முதிர்நது வரவரக்கீ ழிறைஞ்சுமால்'' காஞ்சிப். திருநாட்டு. 96.

2. சந்தனவுரலும் தந்தவுலக்கையும் : ''சந்துரற் பெய்து தகைசா லணி முத்தம், வஞ்சி மகளிர் குறுவரே வான்கோட்டால்'' சிலப். 29.

3. மருப்புலக்கை : ''வயக்களிற்றுக் கோடுலக்கை'' கலி. 41 : 1 - 2, என் பதையும் அதன் குறிப்பையும் பார்க்க.

4. கொடிச்சியர் மலைபாடித் தானியம் குறுதல் மரபு; ''மைபடு மால்வரை பாடினள் கொடிச்சி, யைவன வெண்ணெற் குறூஉ நாடனொடு'' நற். 373 : 3 - 4.

5. ஊடற்கணின்றியும் தலைவனைக் கொடியனென்றற்கு, ''புகையினோய் செய்தான்'' என்பது மேற்கோள். தொல். பொருளியல், சூ. 16. நச்.

6. ''அமருண்கண்'' (கலி. 113 : 2) என்பதன் உரை பார்க்க.

7. முத்து யானைக்கொம்பிலும் பிறக்குமென்பது மரபாதலால் அதனை 'முத்தார் மருப்பு' என்றார் : இது மரபென்பதை (அ) ''பெருங்

(பிரதிபேதம்) 1 வெள்ளைப்பாட்டில், 2 கூறினாள். அது, 3 அகத்திற்குப்.