227

(1) சேயுயர் வெற்பனும் வந்தனன்
1பூவெழி லுண்கணும் பொலிகமா வினியே

எ - து : நூனெறியாலே அறிந்த இவருங் கூடுவதற்கே துவாகிய முகூர்த்தம் வேறுபட்டுத் தப்புதலை ஒருகாலத்தும் அறியாத (2) கணியை முன்னிட்டு, அழகுமிகுகின்ற தொகுத்துக்கூறுதலையும் வகுத்துக்கூறுதலையும் அறியுஞ் சான்றவர் தனக்குச் சுற்றமாக, மூங்கிலையொக்கும் நம்முடைய மெத்தென்ற தோளிற் பசலையும் ஊரிற் கூறும் அம்பலும் பொய்யாகிய 2களவிற் கூட்டமுமெல்லாஞ் சேர நீங்கும்படி நீளிதாய் உயர்ந்த மலையினை யுடையவனும் வந்தான், நின்னுடைய பூவினது அழகையுடைய கண்ணும் பொலிவதாக 3என்றாள்; எ - று.

'கானகனாடன்மகன்' எனவாங்கறத்...........யாய்', எனத் (3) தோழி கூறிய இருபாற் குடிப்பொருளைச் செவிலி கூறி அறத்தொடு நின்றாளெனத் தோழி கொண்டெடுத்துமொழிந்தவாறு காண்க.

இதனால், தலைவிக்குக் செல்வமாகிய உவகை பிறந்தது. தெய்வமஞ்சலென்பது
களவிற்கும் உரித்தாகலிற் 4றங்குலதெய்வமாகிய வரை யுறை தெய்வத்திற்குக் குரவை யாடுதல் தலைவிக்கும் உரித் தாகலிற் கொண்டுநிலைபாடினாள். இஃது அறத்தொடுநிலை ஏழுவகை யினுள் (4) 5ஏத்தலும் எளித்தலும்வந்தன.

இது 6தரவின்பின் 'அவனுந்தான் (5) ஏனலிதணத்து' என்பது முதலிய
கொச்சகங்கள் வெண்பாவாய், 'புனவேங்கை' முதலியன துள்ளலோசை விராய்த் தளைவகை ஒன்றிக் கொச்சகமாய், ஒழந்தபாவும் மயங்கி, சுரிதகம் முடுகிவருதலாற் கலிவெண்பாவுறுப்பின் வேறுபட்ட கொச்சகம். ''ஆசிரிய மருங்கினும


1. ''சேயுயர்.........................வினியே'' என்பது களவுவெளிப்பட்டபின் வரைவு நிகழ்ந்ததற்கு மேற்கோள், தொல் கள. சூ. 49. நச்.

2. கணிகூறும் நல்லவேளையில் வரைதல் மரபென்பது கலி. 93 : 12 - 4. ஆம் அடிகளின் குறிப்பிற்காணப்படும்.

3. இந்நூற்பக்கம், 218, 6 : (8) குறிப்புப் பார்க்க.

4. 'காமர் கடும்புனல்' என்பதனுள் இரண்டு (ஏத்தல், எளித்தல்.) வந்தன என்பர், நச்; தொல். பொருளி. சூ. 13.

5. (அ) '''காமர்.........................வினியே'' இதனுள் 'ஏனலிதணத்து' என்பது முதலிய கொச்சகங்கள் வெண்பாவாய், 'புனவேங்கை' முதலியனதுள்ளலோசை விராய்த் தளையொன்றிய கொச்சகமாய், ஒழிந்தபாவுமயங்கி, சுரிதகமும் முடுகிவருதலின் இது கொச்சகமாயிற்று'' தொல். செய். சூ. 155. நச். (ஆ) '''காமர்..................பெருமையளே' இதுதரவு; இதனுள் இரண்டாம்மடி ஐஞ்சீரான்வந்தது. ' அவனுந்தான்..........மகன்' இதனுள் முதற்க்க

(பிரதிபேதம்) 1 போதெழில், 2கனவிற், 3எனவரைவு மலிந்தமை கூறினாள், 4தங்குலத்தெய்வம், 5எனித்தலும் எடுத்தலும், வந்தது, 6தரவும் அவலூந்.