226

எ - து : அதுகேட்ட தோழி நெய்தலிதழ்போலும் மையுண்கண்ணாகிய நின்கண் மிக என்கண்ணாவதாகவென்றாள்; எ - று.

இதுவும் ''தாயத்தி னடையா'' என்னும் (1) சூத்திரத்தடக்கினாம்.

எனவாங்கு,1

எ - து, என்று நாஞ்சொன்ன அக்காலத்தே; எ - று

46 (2) நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத்
(3) தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக
(4) வேய்புரை மென்றோட் பசலையு மம்பலு
மாயப் புணர்ச்சியு மெல்லா முடனீங்கச்

1. தொல். பொருளியல். சூ. 27.

2. (அ) கலிக்கு உறுப்பாய்வரும் ஆசிரியம் அறுசீரடியும் ஐஞ்சீரடியு முடுகி ஒரு தொடராய் வந்ததற்கு (தொல். செய். சூ. 67. நச்.) ''நெறியறி......................பொலிகமாவினியே'' என்பது மேற்கோள். (ஆ) 'முடுகுவண்ண மென்பது அராகந்தொடுத்த அடியோடு பிற அடிபடத் தொடர்ந்தோடுவது'. என்றுகூறி அதற்கு 'நெறியறி ...................... மம்பலும்' என்பதை மேற்கோள் காட்டுவர், பே; தொல். செய். சூ. 233. (இ) முடுகுவண்ணமென்பது நாற்சீரடியின் மிக்கோடி அராகத்தோடொக்கு மென்றுகூறி அதற்கு 'நெறியறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ' என்பதனை மேறகோள் காட்டினர், இளம்; தொல். செய். சூ. 223. 'முடுகு'. (ஈ) இலக்கண விளக்கத்து முடுகுவண்ணம் நாற்சீரடியின் மிக்கு ஒரடி அராகத்தோடொக்கும்? என்றிருப்பது திருத்த மானதென்று தோற்றுகிறது. இ - வி. சூ. 757. (உ) களவு வெளிப்படுப்போன் தலைவன் என்பதற்கும் (தொல். கள.சூ. 48) (ஊ) கலியில் அறுசீரடியாகிய கழிநெடிலடி வந்ததற்கும் (தொல். செய். சூ. 40) இதனை மேற்கோள் காட்டினர்; நச். (எ) 'நெறியறி செறிகுறிபுரிதிரிபு' என்பது முடுகுவண்ணத்திற்கு மேற்கோள் தொல். செய். சூ : 233. ந.

3. (அ) கலிப்பாவின் ஐஞ்சீரடிவந்ததற்கு 'தகைமிகு....................ரினமாக' என்பது மேற்கோள். தொல். செய். சூ. 63. பே. (ஆ) இதனைக் கலிக்குறுப் பாகிய ஆசிரியத்துள் ஐஞ்சீரடி வந்ததென்பர்; நச். தொல். செய். சூ. 63. நச்.

4. (அ) 'வேய்புரை மென்றோள்' என்பது புரையவென்னு முவமச்சொல் மெய்யுவமத்திற்கு வருதற்குமேற்கோள். தொல். உவம. சூ. 15. இளம். 'கடுப்பு'; (ஆ) 'வேய்புரைமெனறோள்'. குறிஞ்சி. 242.

(பிரதிபேதம்) 1 ஆங்கசை நெறியறி.