225

37 (1) விண்டோய்கன் னாடனு நீயும் வதுவையுட்
(2) பண்டறியா தீர்போற் படர்கிற்பீர் மற்கொலோ
பண்டறியா தீர்போற் படாந்தீர் பழங்கேண்மை
கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ

எ - து : அதுகேட்ட தோழி விசும்பைத் தீண்டுகின்ற மலைநாடனும் நீயும் அக்கலியாணத்தே பண்டு கண்டறியாதீர்போல மிகவும் நடப்பீரோ? பண்டு கண்டறியாதீர்போல நடந்தீருடைய பழைய உறவை யான் கண்டறி யாதேன் போல மிகவும் 1மறைப்போனோ? என்றாள்; எ - று.

ஒகாரங்கள் ஐயம்.

41 (3) மைதவழ் வெற்பன் மணவணி காணாமற்
கையாற் புதைபெறூஉங் 2கண்களுங் கண்களோ

எ - து : மேகந் தவழும் மலையை யுடையவனுடைய மணக் கோலங்காணாமற் கையாலே புதைத்தலைப் பெறுகின்ற கண்களுங் கண்களென்று கூறப்டுமோ? 3எ - று.

43 என்னைமண், (4) நின்கண்ணாற் காண்பென்மன் யான்

எ - து : அதுகேட்ட தலைவியான் நின்கண்ணாலே மிகவுங் காண்பேனென்றாள்; எ - று.
44 (5) நெய்த லிதழுண்கண், நின்கண்ணா கென்கண் மன


1. ''புதுவை போலுநின் வரவுமிவள்வதுவை நாணொடுக்கமுங் காண்கு வல்யானே'' கலி. 52 : 24 - 5.

2.ஒரிடைச்சொல் நிற்கின்றவிடத்தே மற்றோரிடச்சொல்லுநிற்றலாகிய பிறிதவண் நிலையலுக்கு 'பண்டறியா..................மற்கொலோ' என்பது மேற்கோள். தொல். இடை. சூ. 3.நச்.

3. ''கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே,
கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்னகண்ணே'' சிலப். (17) 'பெரியவனை'

4. (அ) ''எம்மெனவரூஉங்கிழைமைத்தோற்ற, மல்லாவாயினும்புல்லுவவுளவே'' என்புழி உள என்றதனால், சிறுபான்மைதலைவி தோழியினுறுப்பைத் தன்னுறுப்பென்று கூறுவனவும் கொள்க வென்றுகூறி அதற்கு (தொல். பொருளி. சூ. 27.) நச்சினார்க்கினியரும் (ஆ) கலிப்பாவினிடையே மூச்சிரடி வந்ததற்கு (தொல். செய். சூ. 70.) பேர். நச். இருவரும் 'நின்கண்ணாற்....................யான்'என்பதைமேற்கோள்காட்டினார்.

5. 'தோழி தலைவியினுறுப்பைத் தன்னுறுப்பென்று கூறுவதாகிய எம்மன வரூஉங் கிழைமைத்தோற்றத்திற்கு 'நெய்தலி தழுண்கண்..........................மன' என்பது மேற்கோள. தொல். பொருளி. சூ. 27.நச்.

(பிரதிபேதம்) 1 மறைப்பேனோ ஒகாரங்கள், 2 கண்ணுங் கண்ணாகுமோகண்ணுங்கண்ணோ, 3 என்றாள்.