(1) நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமா 1மன்றோ எ - து : புனத்தினின்ற வேங்கைப்பூவிற் பொன்போன்ற தாது உதிரும் பாறையையுடைய முற்றத்தே வெளியிலே உண்டாங் கூட்டமும் ஒப்பில் நடக்குமல்லவோ? அந்நனவிற் புணர்ச்சி நடந்ததாக அப்பொழுதே கனவிடத்தே உண்டாய்ப்போதுங் கூட்டத்தைப் போக்கிவிடுவேமல்லவோ? 2எ - று. நனவினாம் புணர்ச்சி கனவினாம் புணர்ச்சியென ஆமென்பனவற்றைக் கூட்டுக, நடக்கலுமென்றது உம்மீற்றுவினையெச்சம்; விரைவுதோன்ற நின்றது. ''வரைவுதலைவரினும்'' (2) என்பதனால் தலைவி தன்வயினுரிமையும் அவன் வயிற் 3பரத்தையுந் தோன்றக் கூறினாள்.
1. ''நனவிற்புணர்ச்சி நடக்கலுமாங்கே'' என்பது (அ) ''அன்னமரபிற் காலங்கண்ணிய, வென்னகிளிவியு மவற்றியல்பினவே'' என்பதனாற் கொள்ளப்படும் வினையெச்சங்களும் உம்மீற்று வினை யெச்சத்துக்கு, மேற்கோள் தொல். வினை. சூ. 32. சே. சூ. 35. தெய். (ஆ) இதனை ஒன்றென முடித்தாற்கொள்க வென்பர் கல்லாடர்; தொல். வினை. சூ. 30. (இ) ''வினையெச்ச கிளவியும் வேறுபல் குறிய'' என்பதனாற் பெறப்படும் என்பர். நச்; தொல். வினை. சூ. 31. (ஈ) செய்து செய்பு என்னுஞ் சூத்திரத்து 'இன்ன' என்றதனால் அடக்கிக்கொள்க வென்பர், மயிலைநாதர்; நன். வினை. சூ. 24. (உ) வினையெச்சங்களுள் இன்னீறு உம்மீறாய்த்திரிந்ததென்பர், இ - வி. நூலாசிரியர்; இ - வி. சூ. 246. (ஊ) 'நனவு, போர்க்களத்தையும் அகலத்தையும் உணர்த்துவதுமன்றிச் சாக்கிர அவத்தையையு முணர்த்துமெனபதற்கு மேறகோள்காட்டுவர், இராமாநுச கவிராயர்; நன். உரி. சூ. 18. 2. தொல். களவு. சூ. 20. இப்பகுதிக்கு நச்சினார்க்கினியர் களவு வெளிப்பட்ட பின்னராயினும் வெளிப்படு முன்னராயினும் வரைந்தெய்துதற் செய்கை தலைவன்கண் நிகழின் ஆண்டு முற்காலத்து நிகழ்ந்த ஆற்றாமை பற்றித் தன்வயினுரிமையும் அவன்வயிற் பரத்தைமையும்படத் தலைவி கூற்று நிகழுமென்று கூறி அதற்கு ''நன்னாடலைவரு......................கடிதுமாமன்றோ'' என்றபகுதியை மேற்கோள் காட்டி 'நாண்தாங்கி ஆற்றுவாரு முளரோ வெனவும் கனவிற் புணர்ச்சி கடிது மெனவும் இரண்டுங் கூறினாள்' என்பர்.
(பிரதிபேதம்) 1 என்றோ, 2 என்று பாடினாள், 3 பாத்தைமையுந்.
|