221

அவர்தம் ஐயன்மார்தாமும் தாம் தொடுத்த அம்புகள இலக்குத்தப்பா ராயினார்; எ-று.

என்றது, விளைவின்றேல் வேட்டையாடியும் உணவுண்டாக்குதுமென்று கருதில் அதுவுந் தப்புமென்றாளென்றவாறு.

(1) எனவாங்கு,
எ - து : என்று; எ - று.

20 (2) அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
வென்னையர்க் 1குய்த்துரைத்தாள் யாய்

எ - து : தமர்வரைவுமறத்துழி அறத்தொடுநின்ற என் 2கூற்றைத் தாய் நெஞ்சாற்கண்டு நற்றாய்க்குத் தான் அறத்தொடுநிற்குங் கூற்றலேபடக் (3) கூற அதுகேட்டு (4) அவளும் என்றமையன்மார்க்குவெகுட்சி 3பிறவாமற்செலுத்திக் கூறினாள்; எ - று.

22 அவரும், (5) தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்
தொருபக லெல்லா முருத்தெழுந் தாறி


1. நற்றாய் தந்தைக்குந் தன்னையர்க்கும் அறத்தொடு நிற்றற்கு ''எனவாங்கு.........................யாய்'' என்பது மேற்கோள்; தொல். கள. சூ. 47. ந.

2. ''தாயறிவுறுதல் செவிலியொடொக்கும்'' என்பதற்கு, 'மகள் களவொழுக் கத்தில், செவிலிகவலுணைக் கவலுதலல்லது தந்தையையுந் தன்னையன் மாரையும்போல நற்றாய் வெகுடலிலள்' என்று கூறி, அறத்தொடு...... ...............யாய்' என்பதைத்தாய்வெகுளாமைக்கும்'' அவரும், தெரிகனை..............தெழுந்து'' என்பதை அவர் வெகுண்டமைக்கும் மேற்கோள் காட்டினார், இளம்; தொல். கள. சூ. 47.

3. ''இங்கிவள்போய் மலலக்காவி னெழில்விசயற் கீடழிந்த வின்ன லெல்லாஞ், சங்கெறியுந் தடம்பொருநைத் துறைவனுக்குச் செவிலியராந் தாயர் சொன்னார்" வில்லி. அருச்சுனன்றீர்த்த. 33.

4. நற்றாய் குறப்பினன்றி யறத்தொடு நிற்கப்பெறாள். நாற். சூ. 178.

5. (அ) நற்றாய் அறத்தொடுநின்றவழி, தந்தையுந் தன்னையரும் முன்னர் நிகழ்ந்த வெகுட்சி நீங்கி உய்த்துக்கொண்டு உணர்வர் என்பதற்கும் தொல். களவி. சூ. 46. நச். (ஆ) அகத்திணைக்கண் ஊரார்முதலிய அறுவகையோர்கூற்றாகப் பிறர் சொல்லி னல்லது அவர் கூறார் என்பதற்கும் தொல். செய். சூ. 191. பே. நச். ''தெரிகணை.....................தலை'' என்பது மேற்கோள். (இ) ''வரிசிலை யிடவயி னேந்திக் கணைதெரிந்,
தெரியுமிழ் கண்ணினரிவரே'' தமிழ்நெறி. மேற்கோள்.

(பிரதிபேதம்) 1 உற்றுரைத்தாள், 2 கூற்றையென்றாய், 3 இறவாமல்.