கொல்லை குரல்வாங்கியீனா மலைவாழ்ந ரல்ல புரிந்தொழுக லான எ - து : சிறுகுடியிலுள்ளீர் ! சிறுகுடியிலுள்ளீர்; 1இம்மலையில் வாழ்வார் இங்ஙனம் உதவியார்க்குக் கொடுக்க நினையாது நொதுமலர்க்குக் கொடுக்க நினைந்து அறமல்லாதன வற்றை விரும்பி ஒழுகுகையினாலே இனி இவ்விடத்து வள்ளியும் கிழங்கு கீழ் (1) விழா; 2மலைமிசையில் தேனுந் தொடா; கொல்லையில் தினைகளுங் கதிர்பறிந்து ஈனாவாம்; எ - று. 15 | (2) காந்தள் கடிகமழுங் கண்வாங் கிருஞ்சிலம்பின் (3) வாங்கமை மென்றோட் குறவர் மடமகளிர் தாம்பிழையார் (4) 3கேள்வர்த் தொழுதெழலாற் (5) 4றம்மையருந் தாம்பிழையார் தாந்தொடுத்த கோல் |
எ - து : காந்தட்பூ மணநாறும், பார்த்தவர்கள் கண்ணைத் தன்னிடத்தே வாங்கிக்கொள்ளுங் கரிய மலையிடத்து 5வளைந்த மூங்கில்போலும் மெல்லிய தோளையுடைய குறவருடைய மடப்பத்தையுடையமகளிர் தாம் தத்தங் கணவரைத் தப்பாராய் அவரே (6) தெய்வமென்று (7) வணங்கி எழுந்திருத்தலாலே
சாகரர்; யா - கா. ஒழிபியல். 8. (ஆ) கூனைத் தனிச்சொல்லென்பாருமுள ரென்று கூறி, ''காமர் கடும்புனலென்னுங் கலியினுள் 'சிறுகுடியீரே' என ஓரடியாலே தனிச்சொல்வந்தது'' என்பர். பெருந்தேவனார்; வீர. யாப்பு.13. 'சிறுகுடியீரே சிறுகுடியீரே' சிலப். 24 : 11. 1. (அ) ''விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை'' மலை. 128. (ஆ) ''கிழங்குகீழ் வீழ்ந்து தேன்மேற் றூங்கிச், சிற்சில வித்திப் பற்பல விளைந்து, தினைகிளி கடியும் பெருங்கன் னாடன்'' நற். 328 : 1 - 3. (இ) ''கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே'' புறம். 109. 2. (அ) ''சிலம்புடன் கமழு மலங்கு குலைக் காந்தள்'' குறுந். 239. (ஆ) ''நறுந்தண்சிலம்பி னாறுகுலைக் காந்தள்'' ஐங். 226. 3. (அ) ''வாங்கமை மென்றோள் வசையின் மகளிர்'' பதிற். 12. 22 - 3. (ஆ) ''வாங்கமை மென்றோட் குறவர் மகளிரேம்'' திணைமொழி. 8. (இ) ''வாங்கமைமென்றோன் மடந்தை'' நற். சூ. 139. மேற்கோள்.''கண்ணுஞ்''. 4. ''கொழுநற் றொதெழுவாள்''. குறள். 55. 5. ''கானவர் வார்விற் கணைபிழை யாதகண் ணார்சிலம்பன்'' தணிகை. களவு. 392. 6. இந்நூற்பக்கம் 61 : 2 -(ஆ,இ) என்பவற்றின் குறிப்புக் பார்க்க. 7. தொழுதெழல் எழுந்து தொழலென்று முன்பின்னாகப் பொருள்படு மென்றும் எழுதல், துயிலொழிதலென்றும் கூறுவர், பிரயோக விவேக. (பிரதிபேதம்) 1 இம்மலைவாழ்வார், 2 மலையிற்கு மிசையில், 3கொள்வர், 4தன்னையரும், 5வணர்ந்த, வளர்ந்த.
|