222

யிருவர்கட் குற்றமு மில்லையா லென்று
தெருமந்து (1) சாய்த்தார் தலை

எ - து : அதுகேட்டு அவரும் (2) ஒரு முகுர்த்தமெல்லாம் நெஞ்சழன்று கண்சிவந்து தெரிந்த அம்புகளையும் பார்த்து வில்லையும் பார்த்து எழுந்து அலமந்து இருவரிடத்துங் குற்றமில்லையாயிருந்ததென்று சினம் ஆறித் தலை சாய்த்திருந்தார்; எ - று.

1இஃது அறத்தொடுநிலை வாய்த்தவாறு கூறியது.

26 தெரியிழாய் நீயுநின் கேளும் புணர
(3) வரையுறை தெய்வ முவப்ப வுவந்து


(ஈ) ''மலை முற்றியபுயத் தாயன்னை கூறமற் றென்னையர் வான், சிலைமுற்றிய வெங் கணைதெரிந் தார்கண் சிவந்துறுத்தே'' அம்பிகா. 361. (உ) ''கடுகிய விளையர் நோக்குங் கண்ணிய பொருளுமெண்ணி, யடுசிலை யழலவேந்தி யாருயிர் பருகற் கொத்த, விடுகணை தெரிந்து'' சீவக. 1086. (ஊ) ''கண்டவக் குமரனும் கடைக்கண் டீயுக, விண்டனை நோக்கித்தன் வில்லை நோக்கினான்'' கம்ப. வேள்வி. 48. (எ) 'கணைகளை ஆராய்ந்து' எடுத்தலை, 'கணைதெரிதல்' என்பது மரபு. இதனை (1) ''கணைதெரிந்து'' நள. சுயம். 99. கம்ப. நாகபாச. 71. பாகவதம். (10) மலரவன் சிறார். 7. (2) ''தெரிகணை'' கம்ப. வருணனைவழி. 32. நாகபாச. 163. நிகும்பலைப் 45; (5) ''கூர்சரங்கடெரிந்தனர்'' வில்லி. பதினான்காம் போர். 45, 128.

1. (அ) ''கனைதுயர்க்கவலையாற் கணனென்பான்றலை, தனையிறக் கிட்டவர் தம்மைப் பார்த்திலன்'' விநாயக. சிந்தாமணி. 117. (ஆ) ''நாணலைப்பத்தலை சாய்த்தார்'' பூவாளூர். இந்திரன். 41.

2. (அ) ''செவ்விதின் முகங்கீழிட்டுத் திருந்துரை யாடா ராகியிவ்வண மிரண்டு, கன்ன லிருந்துளங் கலங்கி னாரே'' பிரமோத்தர. உமாமகேசுவரபூசாபலம். 37. (ஆ) ''முனிவனு மதிதி மாது முகுர்த்தமொன்றவச மெய்தி'' விநாயக. மகோற்கடர். 785.

3. வரையுறை தெய்வமென்றது, (அ) குறிஞ்சிக்கிழவனாகிய முருகக் கடவுளை; கலி. 40 : 11-ஆம் அடியின் உரையையும் (ஆ) ''கெழீஇக்கேளிர் சுற்ற நின்னையெழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே'' - பிரிந்த கேளிர் வந்துபுணர்ந்து பின் நீங்காமைப்போருட்டு மகளிர் யாழை யெழுவி நின்னைப்பாடுகின்ற பாட்டை விரும்பினோய். பரி. 14 : 23 - 4, என்பவற்றையும் (இ) சிலப். 24 : ''கயிலை'' ''மலைமகள்'' ''குறமகள்'' என்னும் முதலையுடைய செய்யுட்களையும் நோக்குக.

(பிரதிபேதம்) 1 தெரியிழாய்.