(1) தேனி னிறாலென 1வேணி யிழைத்திருக்குங் கானக னாடன் மகன் எ - து : இவளேயன்றி அவன்றானும் தினைப்புனத்திலிட்ட பரணிடத்து எரிந்து அகிலின் புகையாலுண்ணப்பட்டு ஒளிமழுங்கித் திரியும் மதியம் வானிடத்தேசென்று அம்மலைத்தலையிலேதங்கிற்றாயின் (2) அதனை அந்தமலையில் வைத்த தேனினது இறாலென்றுகருதி அதனை அழித்தற்குக் (3) கண்ணேணி முதலியன சமைத்திருக்குங் காடு அகன்ற நாட்டையுடையவன்மகன்; எ - று. மிக்க ஒளியினையுடைய மதி புகையால் மாசுண்ட தன்மைபற்றித் தங்கையகப்படுத்திப் பயன்கொள்ளக்கருதும் நாடனெனப் புகழ்மிக்க தலைவனும் புனலிடைத் தழுவிப் 2போதந்ததனாற் சிறிது புகழ்குறைந்தமை பற்றி யாமும் அவன் வரைந்துகொள்ளக் கருதுகின்றேமென உள்ளுறையுவமங் கொள்க. இதனால், தலைவன் 3நங்குலத்தினும் உயர்ந்தானென்பது தோன்றக் கூறினாள். இது 4பிறப்பொப்புமை கூறிற்று.
11 | (4) 5சிறுகுடி யீரே சிறுகுடி யீரே வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்றொடா |
1. கண்ணேணி யிழைத்துத் தேன் கொள்ளுதல் மரபு; இதனை ''கலைகையற்ற காண்பி னெடுவரை, நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப், பெரும்பயன் றொகுத்த தேங்கொள் கொள்ளை, யருங்குறும் பெறிந்தகானவர்'' மலைபடு. 315-8. என்பதனாலுமுணர்க. 2. (அ) ''மதியம் இறால்போலத் தோன்றுமென்பதை இறால் மதிபோலத் தோன்றுமென்னும் பொருளுள்ள கலி. 42 : 22 - 3 - ஆம் அடிகளாலும் அவற்றின் குறிப்பாலுமுணர்க. (ஆ) மதியம் - பூரணசந்திரன்; இதனை, (1) ''குடமுதற் றோன்றிய தொன்றுதொழு பிறையின், வழி வழிச் சிறக்கநின் வலம்படு கொற்றங், குணமுதற் றோன்றிய வாரிருண் மதியிற், றேய்வன கெடுகநின் றெவ்வ ராக்கம்'' மது. 193 - 6. (2) ''பெரியவர் கேண்மை பிறைபோல நாளும், வரிசை வரிசையா நந்தும் - வரிசையால், வானூர்மதியம்போல் வைகலுந் தேயுமே, தானே சிறியார் தொடர்பு'' நாலடி, 125. (3) ''நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப், பின்னீர பேதையார் நட்பு'' குறள். 782. எனத் தெளிவுறக் கூறுதலாலும் : (4) ''மதி நிறைவுபோ னிலையாது'' கலி. 17 : 7. என்பதனாலும் அதன் அடியிலுள்ள பிற குறிப்புக்களாலும் உணர்க. இஃது இம்மரபு கடந்தும் வரும். 3. கண்ணேணி - கணுக்களிலேயே அடிவைத்து ஏறி யிறங்கும்படி அமைத்துள்ள மூங்கில்; கண் - கணு. 4. (அ) ''காமர் கடும்புனல்'' என்னுங் கொச்சகக்கலியுள், 'சிறுகுடியீரே சிறு குடியீரே' எனவோரடியாற் கூன்வந்தவாறு காண்க. என்பர், குண (பிரதிபேதம்) 1 எண்ணி, 2போத்தந்ததனால், 3 தங்குலத்தினும், 4புறம்பொப்புமை, 5சிறுகுடீஇரே.
|