வருமுலை புணர்ந்தன வென்பதனா லென்றோழி (1) யருமழை 1தரல்வேண்டிற் (2) றருகிற்கும் (3) பெருமையளே எ - து : எம்மோடேகூடி விருப்பத்தையுடைய (4) கடிய நீரையாடுகின்றவள் கால்தளர்ந்து அஞ்சித் தாமரைபோலுங் கண்ணைப் புதைத்து அந்நீரோடே போகையினாலே தனக்குச்சென்ற (5) அருளினாலே நீண்ட சுரபுன்னைப் பூவாற் கட்டின நறிய குளிர்ந்த மாலை அசையும்படி அந்நீரிலே குதித்துப் பூணினை யுடைய இவள் மார்பைத் தன்மார்போடே உறும்படி அணைத்துக்கொண்டு கரையிலே போதவிட்டவனுடைய அகன்ற மார்பை இவளுடைய எழுகின்ற முலைகள் கூடினவென்று பிறர் கூறுகின்ற கூற்றாலே என்னுடைய தோழி நமக்கு அரியமழையைப் பெய்விக்க நாம் விரும்பில் அதனை நமக்குத் தரவல்ல கற்பின் பெருமையளாயினாள்; எ - று. 7 (6)அவனுந்தான், ஏன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் (7) வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத்
1. ''வான்றருங் கற்பினாள்'' கலி. 16 : 20. என்பதும் அதன் குறிப்புக்களும் ''மழைவளந்தரு கற்பினர்'' விநாயக. திருநாட்டுப். 70. என்பதும் ஈண்டு உணர்தற் பாலன. 2. கில், ஆற்றலுணர்த்துவதோர் இடைநிலை. 3. ''மாரி, வறப்பிற் றருவாரு மில்லை'' (நாலடி. 104.) என்றிருப்பவும் அதுதருஞ் சிறப்புப்பற்றி 'பெருமையள்' என்றார். 4. கடும்புனல் - மிக்கபுனலென்பர், இளம்; தொல். உரி. சூ. 80. 5. அருள் இன்னதென்பதை இந்நூற்பக்கம் 28; 3-ஆம் குறிப்பாலறிக. 6. (அ) 'இருபாற் குடிப்பொரு ளியல்பின் கண்ணும்' என்புழி 'அவனுந் தான்.................உரைத்தாள்யாய்' என்பவற்றை மேற்கோள்காட்டி, 'தோழி தான் கூறிய இருபாற் குடிப்பொருளைக்கூறிச் செவிலி அறத்தொடு நின்றாளெனக் கொண்டெடுத்து மொழிந்தவாறு காண்க' என்பர். நச். தொல். களவி சூ. 24. (ஆ) 'அவனுந்தான்.................நாடன்மகன்' என்பது பிறப்பொப்புமைக்கும் தொல். மெய்ப். சூ. 25 : பே. (இ) இடை நின்றகொச்சகம் ஈற்றடி குறைந்ததற்கும் தொல். செய். சூ. 155. பே. மேற்கோள். (ஈ) கலிப்பாவின் அளவடிக்கண் சீர்கூனாய்வருதற்கு ''அவனுந்தான்.........................இயங்கும்' என்பது மேற்கோள். தொல். செய். சூ. 49. பே. 7. (அ) ''வானூர்மதியம்'' நாலடி. 125; (ஆ) சிலப். 6 : 37; (இ) தொல். செய். சூ. 153. பே. மேற். (ஈ) ஊர்தல், போதலென்னும் பொருளில் வருதற்கு ''வானூர் மதியம்'' என்பது மேற்கோள். சீவக. 286.
(பிரதிபேதம்) 1 தான்வேண்டின்.
|