217

துழித் தோழி தாயர்க்கு அறத்தொடு நிற்ப, அவள் நற்றாய்க்கு அறத்தொடு நிற்ப, அவள் தன்னையர்முதலியோர்க்கு அறத்தொடுநிற்ப, அவரும் ஒருவாற்றான் 1உடன் பட்டமை தோழி தலைவிக்குக் கூறி, தானும் அவளும் வரைவுகடிதின் முடிதற் பொருட்டு வரையுறை தெய்வத்திற்குக் குரவையாட அவன் வரையவருகின்றமை தோழி தலைவிக்கு உரைத்தது.

இதன்பொருள்.

(39.) (1) காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவா
(2) டாமரைக் கண்புதைத் தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலா
னீணாக 2நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற்
(3) பூணாக முறத்தழீஇப் 3போதந்தா 4னகனகலம்

1. (அ) ''திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய, துணையறை மாலையிற் கைபிணி விடேஎ, நுரையுடைக் கலுழிபாய்தலி னுரவுத்திரை, யருங்கரை வாழையி னடுங்கப் பெருந்தகை, யஞ்சி லோதி யசையல் யாவது,
மஞ்ச லோம்புநின் னணிநல நுகர்கென'' குறிஞ். 176 - 181. (ஆ) ''முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப், புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்'' என்புழி, ''புனறரு புணர்ச்சியும் பூத்தருபுணர்ச்சியும் களிறுதரு புணர்ச்சியும் போல்வன செவிலிக்குக் கூறி அவள் நற்றாய்க்குக்கூறுதலை நிகழ்த்துவித்தலாம். எனவே அவள்தந்தைக்குந் தன்னையர்க்கும் உணர்த்துதலும் அதனை மீண்டுவந்து தலைவிக்கு உணர்துதலும் பெற்றாம். அவ்வறத்தொடுநிலை எழுவகைய எனப் பொருளியலிலும் கூறுப'' என்றுகூறி 'காமர்கடும்புனல் .................... சாய்த்தார் தலை' என்பதை மேற்கோள்காட்டி, ''புனறரு புணர்ச்சியாற் றோழி செவிலிக்கு அறத்தொடு நிற்ப, செவிலி நற்றாய்க்கு அறத்தொடுநிற்ப, அவள் ஏனையோர்க்கு அறத்தொடு நின்றவாறு காண்க'' என்பர். நச். தொல். களவி. சூ. 23. (இ) புனல்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றற்கு, ''காமர்...........................பெரு மையளே'' என்பது மேற்கோள்; இறை. சூ. 15; நாற்கவி. சூ. 177. (ஈ) ஏதீடு தலைப்பாடு என்பதற்கு யாதானுமோரேதுவை இடையிட்டுக்கொண்டு தலைப்பட்டமை கூறுதல் என்று பொருள்கூறி இப்பகுதியை மேற்கோள்காட்டி, 'இது புனலிடை உதவினானெனத் தலைப்பாடு கூறியது' என்பர். இளம். தொல். களவி. சூ. 23. (உ) கட்டளை யடியல்லாத கலியடிக்கண் நேரீற்றியற்சீர் வருதற்கு, ''காமர்கடும்புனல் கலந்தெம்மோடாடுவாள்'' என்பது மேற்கோள். தொல். செய். சூ. 25. பே.

2. இவ்வடியை நாற்சீரடியாகக் கொள்ளின் மோனை நயமுறும்.

3. வேட்கையுரைத்தலென்னும் அறத்தொடு நிலைக்கு, ''பூணாக............போதந்தான்'' என்பது மேற்கோள். தொல். பொருளி. சூ. 13. நச்.

(பிரதிபேதம்) 1 உடம்பட்டமை, 2நறும்பைந்தார், 3போத்தந்தான், 4அலனகலம்.