216

26 தெரியிழாய் நீயுநின் கேளும் புணர
வரையுறை தெய்வ முவப்ப வுவந்து
குரவை தழீஇயா மாடக் குரவையுட்
கொண்டு நிலைபாடிக் காண்;
30நல்லாய்,
நன்னா டலைவருமெல்லை நமர்மலைத்
தந்நாண்டாந் தாங்குவாரென்னோற் றனர்கொல்;
33புனவேங்கைத்தாதுறைக்கும் பொன்னறை முன்றி
னனவிற் புணர்ச்சிநடக்குமா மன்றோ
நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே
கனவிற் புணர்ச்சி கடிதுமாமன்றோ;
37விண்டோய்கன்னாடனு நீயும் வதுவையுட்
பண்டறியா தீர்போற்படர்கிற்பீர் மற்கொலோ
பண்டறியா தீர்போற்படர்ந்தீர் பழங்கேண்மை
கண்டறியா தேன்போற்கரக்கிற்பென் மற்கொலோ;
41மைதவழ்வெற்பன் மணவணி காணாமற்
கையாற் புதைபெறூஉங்கண்களுங் கண்களோ;
என்னைமன், நின்கண்ணாற்காண்பென்மன் யான்;
நெய்த லிதழுண்கண், நின்கண்ணாதென்கண் மன;
எனவாங்கு;
46நெறியறிசெறிகுறி புரிதரி பறியா வறிவனை முந்துறீஇத்
தகைமிகுதொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக
வேய்புரைமென்றோட் பசலையு மம்பலு
மாயப் புணர்ச்சியுமெல்லா முடனீங்கச்
சேயுயர் வெற்பனும் வந்தனன்
பூவெழிலுண்கணும் பொலிகமா வினியே.

இது ''முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப், புரைதீர் கிளவி தாயிடைப்புகுப்பினும்'' என்னும் (1) விதிபற்றித் (2) தமர் வரைவுமறுத்


1. தொல். களவியல். சூ. 23.
2. இக்கிளவியின் செய்திவிரிவை, சீவகசிந்தாமணி. 1046 - 62 -ம் செய்யுட்களானுணர்க.