215

(39.): (1) காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவா
டாமரைக் கண்புதைத் தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலா
னீணாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற்
பூணாக முறத்தழீஇப் போதந்தா னகனகலம்
வருமுலை புணர்ந்தன வென்பதனா லென்றோழி
யருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே;
7அவனுந்தான், ஏனலிதணத் தகிற்புகை யுண்டியங்கும்
வானூர் மதியம்வரைசேரி னவ்வரைத்
தேனி னிறாலென வேணியிழைத்திருக்குங்
கானக னாடன் மகன்;
11சிறுகுடி யீரேசிறுகுடி யீரே
வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்றொடா
கொல்லைகுரல்வாங்கி யீனா மலைவாழ்ந
ரல்ல புரிந்தொழுக லான்;
15காந்தள்கடிகமழுங் கண்வாங் கிருஞ்சிலம்பின்
வாங்கமைமென்றோட் குறவர் மடமகளிர்
தாம்பிழையார்கேள்வர்த் தொழுதெழலாற் றன்னையருந்
தாம்பிழையார்தாந்தொடுத்த கோல்;
எனவாங்கு,
20அறத்தொடுநின்றேனைக் கண்டு திறப்பட
வென்னையர்க்குய்த்துரைத்தாள் யாய்;
22 அவருந்,தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்
தொருபகலெல்லா முருத்தெழுந் தாறி
யிருவர்கட் குற்றமுமில்லையா லென்று
தெருமந்து சாய்த்தார் தலை;

(ஆ) '''இமயவில்.....நாடகேள்' என்ற இதன் உள்ளுறையுவமத்தால் தலைவி விழுமங் கூறி அதனையு முடன்கொண்டு சுரிதகத்து 'நின்னுறு....................கொளற்கே' எனக் கூறுதலான் இயலென்ற இலேசால் தரவின் பொருள் கொண்டிற்ற சுரிதகம் வந்தது'' தொல். செய். சூ. 137.

1. இச்செய்யுள் இன்னதின்னதற்கு மேற்கோளென்பது இதனுரையிறுதிக் குறிப்பிற் காணப்படும்.