214

(1) வேங்கைவிரிவிட நோக்கி
1(2) வீங்கிறைப் பணைத்தோள்வரைந்தனன் கொளற்கே

எ - து : நின்னுடைய மிகுதலையுடைய வருத்தத்தை யான் கூறக்கேட்டு நல்ல மலைநாடன், தோழீ ! வேங்கை அலர்கின்ற காலத்தைப் பார்த்துப் பெருத்த இறையினையுடைய பணைத்தோளை வரைந்து கோடற்கு 2வரும்; எ-று.

இது சுரிதகம்.

இதனால், தலைவிக்குச் செல்வமாகிய உவகை பிறந்தது.

இஃது 'ஐயிரு தலையினரக்கர் கோமான்' என ஆசிரியத்தளையும் வந்து பதினோரெழுத்தான் வந்த அடிபெற்ற ஒன்பதடித்தரவும் நான்கடித்தாழிசையுந் தனிச்சொல்லும் 3இயலென்ற இலேசால் தரவின் (3) உள்ளுறைப் பொருளையுங் கொண்டு நின்ற நான்கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (2)


1. வேங்கை நன்னாளில் மலருமென்பதையும் அந்நாளில் வரைதல் மரபென்பதையும் (அ) ''நன்னாள் வேங்கையு மலர்கமா வினியென'' (ஆ) ''வேங்கை நாளுறுபுதுப்பூ'' (இ) ''காரரும்பவிழ்ந்த கணிவாய் வேங்கை'' நற். 206 : 7. 313 : 1, 313:6. (ஈ) ''வேங்கையுமொள்ளிணர் விரிந்தன, நெடுவெண் டிங்களு மூர்கொண்டன்றே'' (உ) ''நன்னாட் பூத்த நாகிளவேங்கை'' (ஊ) ''நன்னாள் வேங்கைவீ'' (எ) "மன்றவேங்கை மணநாட் பூத்தமணியே ரரும்பின் பொன்வீ'' அகம். 2: 16 - 7, 85 : 10, 133 : 4, 232 : 7 - 8. (ஏ) ''இளவேங்கை நாளுரைப்ப'' (ஐ) ''நாள்வேங்கை பொன்விளையு நன்மலை நன்னாட்'' (ஒ) ''நாள்வேங்கை. நீழலுள்'' திணைமா. 18, 20, 31 (ஓ) ''கணிநிறவேங்கை'' திணைமொழி. 9. (ஒள) ''பன்னாளு நின்ற விடத்துங் கணிவேங்கை, நன்னாளே நாடி மலர்தலால்'' பழமொழி. 120. (ஃ) ''கணிவளர் வேங்கை'' தே. (அஅ) ''கணித்தொழில் புரியும் வேங்கை''............................................. (ஆஆ) ''நன்னாட்பூத்த பொன்னிணர் வேங்கை'' (இஇ) ''நன்னாள் வேங்கைப் பொன்னேர் புதுமலர்' (ஈஈ) ''பிணியவிழ்ந்து நன்னாளாற் பூப்பனவும் வேங்கை'' யா - வி. சூ. 6, 16, 37, மேற்கோள். (உஉ) ''கடிநாள் வேங்கையும்'' (ஊஊ) ''கணிவாய்வேங்கையும்'' பெருங். (1) 50 : 26. (2) 20 : 59. என்பவற்றாலுணர்க.

2. (அ) ''வீங்கிறைத்தடைஇய வமைமருள் பணைத்தோள்'' பதிற். 54 : 3. (ஆ) ''வீங்கிறைப் பணைத்தோண் மடந்தை. புறம். 354 : 9.

3. (அ) ''இமயவில்வாங்கிய வீர்ஞ்சடையந்தணனென்னுங் குறிஞ்சிப்பாட்டினுள் 'கோடுபுய்க் கல்லா துழக்கு நாடன்' என்று உள்ளுறை யுவமத்தாற் றலைவியதுவிழுமங்கூறக்கொழுநன் (?) மலைநாடனெனவைத்தமையின் அது தரவியலொத்தாயிற்று'' என்பர் பே; தொல். செய். சூ. 137.

(பிரதிபேதம்) 1 வீங்கிழைப், 2 வருமென வரைவுமலிந்து கூறினாள், 3அயலென்றஇலைசால்.