213

எ - து : கைப்பொருளில்லாதான் இளமைபோல நின் அளிபெறாமற் பொலிவழிந்தவள் நீ இருளிடத்தில் 1இராவென்று கருதாயாய் ஆண்டுவரும் ஏதத்திற்கு அஞ்சாயாய் வர, விடியற்காலத்தே அருளுதலை வல்லவனுக்கு உண்டாய ஆக்கம்போல அழகுபெறும்; அங்ஙனம் பெற்ற அழகு பிறரான் வந்த அழகென்று புறஞ்சொல்லுதலைப் போக்குவதொரு பொருளுண்டாகில் அதனை எங்களுக்குக் கூறிக்காண்; எ - று.

18 மறந்திருந்தா ரென்னாய்நீ மலையிடை வந்தக்கா
(1) லறஞ்சாரான் மூப்பேபோ லழிதக்காள் வைகறை
(2) திறஞ்சேர்ந்தா னாக்கம்போற் றிருத்தகு மத்திருப்
புறங்கூற்றுத் தீர்ப்பதோர் பொருளுண்டே 2லுரைத்தைக்காண்

எ - து : தருமநெறியைப் பொருந்தாமல் வறிதே மூப்பினை எய்தியவன் மறுமைச்செல்வத்திற் பொலிவிழந்தாற்போல நின் அளிபெறாமற் பொலிவிழந்தவள் கொலைத்தொழிலிற் குறைவின்றித் திருந்திய கானவரென்று கருதாயாய் அம்மலைச்சாரலிலுண்டாகிய வழிக்கண் வந்த இடத்து அவ்வரவினாற்பெற்ற முயக்கின்பத்தாலே விடியற்காலம் கூறுபாடுடையவனுடைய செல்வப்பொலிவுபோல அழகுபெறும்; அங்ஙனம் பெற்ற அழகால் அயலவர் கூறத்தக்க புறங்கூற்றுரையை மாற்றத்தக்க தொருபொருளுண்டாகில் அதனை எங்களுக்குக்
கூறிக்காண்; எ - று.

பொருளென்றது ஆகுபெயர்.
இவை மூன்றும், தாழிசை.
எனவாங்கு,
எ - து. என்று; எ - று.
ஆங்கு அசை.
இது தனிச்சொல்.

23. நின்னுறு விழுமங் கூறக் கேட்டு
வருமே தோழி நன்மலை நாடன்


1. (அ) ''மறுபிறப்பறியாதது மூப்பன்று'' முதுமொழிக் 50; (ஆ) ''மூத்தாலு, நன்கறியார் தாமு நனியுளர்'' பழ. 399.

2. (அ) ''வகுத்தலும் வல்லதரசு'' (ஆ) ''அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து, தீதின்றி வந்தபொருள்''
(இ) ''உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த், தெறுபொருளும் வேந்தன் பொருள்'' குறள். 385, 754, 756. (ஈ) ''கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம்,வெள்ளத்தின் மேலும்பல'' நீதிநெறி. 29.

(பிரதிபேதம்) 1 இரவென்று, 2 உரைத்துக்காண்.