(1) கார்பெற்ற புலமேபோற் கவின்பெறு மக்கவின் றீராமற் காப்பதோர் திறனுண்டே லுரைத்தைக்காண் எ - து : நீரற்ற நிலத்திற் பயிர்போல நின் அளிபெறாமற் பொலிவழிந்தவள் நீ வருவதற் கரிய இடமென்று கருதாயாய் ஆண்டுள்ள பாம்பை அஞ்சாயாய் வர, விடியற்காலத்தே மழையைப் பெற்ற நிலத்திற் பயிர்போல அழகுபெறும்; 1இனி அங்ஙனம் பெற்ற அழகு இவளைவிட்டு நீங்காமல் நிலைபெற்று, நிற்கும்படி காப்பதொரு கூறுபாடு உண்டாகில், அதனை எங்களுக்குக் கூறிக்காண்; எ - று. வந்தக்கால், காலீற்று வினையெச்சம்; உரைத்துக்காணென்பது உரைத்தைக்காணென வினைத்திரிசொல்லாயிற்று.
14 | இருளிடை யென்னாய்நீ யிரவஞ்சாய் வந்தக்காற் (2) பொருளில்லா னிளமைபோற் புல்லென்றாள் வைகறை (3) யருள்வல்லா னாக்கம்போ லணிபெறு மவ்வணி தெருளாமற் காப்பதோர் திறனுண்டேலுரைத்தைக்காண் |
மயிலெருத் துறழுமேனி மாயவன் வரவுகேளாக், குயிலென மிழற்று மாது கொழுங்கவி னெய்தினாளே''. பாகவதம். (10) உருக்குமிணி. 28.
1. (அ) ''கானலஞ் சேர்ப்பனைக் கண்டாய்போலப், புதுவது கவினினை'' கலி. 128 : 6 - 7. (ஆ) ''குருந்த மேறிய கூரரும் பார்முல்லை, பொருந்து கேள்வரைப் புல்லிய பொன்னனார்மருங்கு போன்றணி மாக்கவின் கொண்டதே''. (இ) "நீர்துளும்பு வயிற்றின் னிழன்முகில், பார்துளும்ப முழங்கலிற் பல்கலை, யேர்துளும்ப வெரீஇயிறை வற்றழீஇக், கார்துளும்பு கொம்பிற்கவினெய்தினார்''. சீவக. 1195, 2672. (ஈ) ''வானிறைகின்ற கொண்மூவார்துளி தலைஇயபின்றைக், கானிறை மரனும் பூடும் வல்லியுங் கவின்றாலென்ன'' கந்த. இந்திரனருச்சனை. 13. (உ) ''நீர் பெற்றுயர்ந்த நிறைபுலமோ'' நள. கலிநீங்கு. 90. (ஊ) ''காரிற் குளிர்ந்து குழைந்தசெழுங் கானம் பூத்த தெனக்கவினி'' வில்லி. பன்னிரண்டாம். 82. என்பவைகளும் (எ) ''அணங்கனையார் நுகர் வேய்தலின்'' சீவக. 871. என்பதும் 'அணங்கனையார், கணவரிடத்து நுகர்ச்சியால் அவயவங்கள் செவ்வி பெறுதலின் என்னும் அதனுரையும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலன. 2. ''வறியவனிளமைபோல் வாடிய சினையவாய்'' கலி. 10 : 1, என்பதும் அதன் அடிக்குறிப்புக்களும் இங்கு ஒப்புநோக்கற் பாலன. 3. ''இரப்பவர்க் கீயக் குறைபடுமென் றெண்ணிக், கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பிற், றுறைத்தோணிநின்றுலாந் தூங்குநீர்ச்சேர்ப்ப, விறைத்தோறு மூறுங் கிணறு'' பழ. 344.
(பிரதிபேதம்) 1 அங்ஙனம் பெற்ற வழகினைவிட்டு.
|