லாற்றாது வருந்துகின்றவனைப்போல, மிகுதியையுடைய புலியினது வடிவை யொப்பப்பூத்த (1) வேங்கைமரத்தைப் புலியெனக்கறுவுதல்கொண்டு, அதன் அடியிலே குத்திய மதத்தையுடைய யானை, நீண்ட பெரிய முழைஞ்சிடமெல்லாம் ஒலிக்கும்படி கூப்பிட்டுத் தன் கொம்பைவாங்கமாட்டாதே வருந்தும்நாடனே! யான் கூறுகின்றதனைக் கேள்; எ - று. கொடிதாகிய புலியின் உருவையொப்ப வேங்கை 1பூத்ததென்றதனைக் களவின்கட் பெறுகின்ற இன்பத்தை நீக்குதலிற் கொடியதுபோற் றோன்றிக் கற்பின்கண் இல்லறப் பயனோடு 2கூடிப் பேரின்பத்தைத் தருகின்ற வரைவுகடாய கூற்றாகவும், வேங்கையைப் பகையாகக் கருதி அதனோடே பொருத 3யானையை அக்கூற்றைத் தான் நுகர்கின்ற இன்பத்திற்குமாறாகக் 4கருதி அக்கூற்றுடனே மாறுபட்டு வருகின்ற தலைவனாகவும், விடரகஞ் சிலம்பக் கூவுதலை அத்தலைவன் அவ்வொழுக்கத்திற்கு இடையீடுபட்டு வருந்திக் கூறுகின்ற கூற்றாகவும், கோடு புய்க்கல்லாது உழத்தலை அக்கூற்றைப் பகையென்று கொண்ட மனத்தை அவள் கூற்றை நன்றென்று கருதி நீக்கமாட்டாது வருந்துதலாகவும் உள்ளுறையுவமங் 5கொள்க. உழப்பவன்போல வென்றஏனையுவமம் பின்வருகின்ற வேங்கையைக்குத்திய யானை கோடு புய்க்கல்லாதுழக்கு மென்ற உள்ளுறையுவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக் 6கொடுத்து அதுவும் உள்ளுறையுவமம்போலத் திணையுணர்த்தலைத் தள்ளாது நின்றது. இது வினையுவமப்போலி. இஃது ''உள்ளுறை யுவம மேனை யுவமமெனத், தள்ளாதாகுந் திணையுணர் வகையே'' என்னும் (2) அகத்திணையியற் 7சூத்திரத்தினும் ''உடனுறை யுவமஞ் 8சுட்டுநகை சிறப்பெனக், கெடலருமரபி னுள்ளுறை யைந்தே'' என்னும் (3) பொருளியற் 9சூத்திரத்தினும் யாங் கூறிய உரையான் உணர்ந்துகொள்க. மேலும் இத்தொகையுள், ஏனை யுவமமும் வந்தும் ஏனையுவமம் உள்ளுறையுவமத்திற்குச் சிறப்புக் 10கொடுத்துத் திணையுணர்தலைத் தள்ளாது நிற்கும் பாட்டுக்கட்கெல்லாம் இச்சூத்திரங்களே விதியாகக்கொள்க. ''நன்றே'' என்னுங் (4) குறுந்தொகையும் அது. இது தரவு. 10. ஆரிடை யென்னாய்நீ யரவஞ்சாய் வந்தக்கா (5) னீரற்ற புலமேபோற் புல்லென்றாள் வைகறை
1. யானை, வேங்கைமரத்தைச்சினந்து கெடுத்தலுண்டென்பதை, கலி. 49, 2- 6. ஆம் அடிக்குறிப்பான் உணர்க. 2. தொல். அகத். சூ. 46. 3. தொல். பொருளி. சூ. 48. 4. குறுந்தொகையில் இம்முதலுள்ள பாட்டுக் காணப்படவில்லை. 5. ''வெயில் பொரவாட்டமுற்ற மென்றளிர்ப்பசிய வல்லிபுயல்பொழி துவலைமாந்திப் பொங்கெழில் படைக்கு மாபோன்,
(பிரதிபேதம்) 1 பூத்தவென்றதனை, 2 கூடியபேரின்பத், 3 கருதிய கூற்று, 4 யானையைக்கூற்றை, 5 கைக்கொள்க, 6 கொடுத்தவதுவும், 7 சூத்திரத்தானும், 8சுட்டுநிலைநகை, சுட்டுநரைசிறப், 9 சூத்திரத்தானும், 10 தொடுத்திணை.
|