நீடிரு விடரகஞ் சிலம்பக் கூய்த்தன் (1) கோடு (2) புய்க் கல்லா துழக்கு நாடகேள் எ - து : இமயமலை யிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்த, கங்கையான் ஈரத்தையுடைத்தாகிய சடையினையுடைய இறைவன், இறைவியோடே பொருந்தி, (3) 1உயர்ந்தகயிலைமலையிலே இருந்தானாக, 2அரக்கர்க்கரசனாகிய பத்துத்தலையையுடைய இராவணன் வரையெடுத்தற்குக் கையைக் கீழே 3செருகி, தொடிபொலிவுபெற்ற 4அத்தடக்கையினாலே அம்மலையை எடுத்த
(உ) ''மெல்லிணர் வேங்கை வியலறைத் தாயினவழுகை மகளிர்க் குழுவை செப்ப'' பரி. 14 : 11 - 2. (ஊ) ''குறவ ரூன்றிய குரம்பை புதையவேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலிசெத்து'' அகம். 12 : 9 - 11. (எ) ''அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கைமாத்தகட்டொள்வீ தாய துறுகலிரும்புலி வரிப்புறங் கடுக்கும்'' புறம். 202 : 18 - 20. (ஏ) ''புலிப்பறழன்ன பூஞ்சினை வேங்கை'' தொல். மர. சூ. 10. பே. மேற்கோள்; (ஐ) ''கருங்கா லினவேங்கை கான்றபூக் கன்மேலிருங்கால் வயவேங்கை யேய்க்கும்'' திணைமாலை. 26; (ஒ) ''நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாக நண்ணி, மறமனை வேங்கை யெனநனி யஞ்சும்'' கோவையார். 96. (ஓ) ''புலியதள்போர்ப்பவெடுத்து நின்றதே போன்றதா லிணர்விரி வேங்கை'' (ஒள) ''புலியுருமருளப் பூத்த பூந்துணர் வேங்கை யொள்வீ'' காஞ்சி. திருக்கண். 156 : 252. என்பவற்றால் உணர்க. (ஃ) ''வேங்கையஞ் சினையென விறற்புலி முற்றியும்'' கலி. 46 : 5. என மாறிவருதலும் காண்க. 1. (அ) ''மறமிகுவேழந்தன் மாறுகொண்மைந்தினாற் புகர்நுதல்புண்செய்த புய்கோடுபோல'' கலி. 53 : 3 - 4. (ஆ) 'கோடுபுய்க்கலாது நின்ற அக்களிற்றை' சீவக. 2276. உரை. 2. 'புய்' என்பது (அ) ''புய்த்தெறிக்கரும்பின்'' புறம். 28 : 12; (ஆ) ''கோட்டினிற் குத்திக்குடர் புய்த்துறுத்து'' மணி, 13 : 47. (இ) ''நெடுங்கையுந் தலையும் புய்யாநொய்தினி னிமிர்ந்து'' கம்ப. அதிகாயன், 222. எனச் செயப்படு பொருள்குன்றா வினையாயும் (ஈ) ''புய்ந்துகால்போகி'' கள. 39. எனச்செயப்படு பொருள்குன்றியவினையாயும். (உ) ''மெய்வதிவேல், புயந்து மேல்வரும் பொருநர்கள் சிரங்களும் புரட்டி'' (ஊ) ''புயக்க வலியின்றி'' விநாயக. திரிபுரதகன. 60; மயூரேசர், 87. (எ) ''புயக்கவந்துறாமையின்'' (ஏ) ''புக்கவுண ராவிகள் புயக்கு மிறைவாளி'' (ஐ) ''புக்கபகன்வாள்விழிபுயந்து'' பேரூர். குழகன்குளப்புச். 39, மருதவரை 118, கௌரிதவம். 25. (ஒ) ''புயக்க வொருமைந்தனைப் போவித்தார்'' கச்சிஆனந்தருத். 292. என அகரச்சாரியைபெற்றும் வருதல்காண்க. 3. ''ஊழிதோ றோங்குமவ் வோங்கல்''
(பிரதிபேதம்) 1 கயிலை, 2 பத்துத்தலையையுடைய அரக்கர்க்கரசனாகிய இராவணன், 3சொருகி, 4 தடக்கை.
|