209

(1) வையிரு தலையி னரக்கர் கோ மான்
1றொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை

5 யெடுக்கல் செல்லா துழப்பவன் போல
(2) வுறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவுகொண் டதன்முதற் குத்திய மதயானை


வலமுறை சூழவரும்'' நீலகேசி. தருமவுரை. 63. என்பவற்றையும் நோக்கின் மந்தரமென்பதும் மேருவின் பெயரோவென்று ஐயுறவுறுகின்றது. (13) ''அந்தரமுழிதரு திரிபுர மொருநொடி யளவினின்,மந்தர வரிசிலை யதனிடை யரவரிவாளியால்,வெந்தழிதரவெய்த விடலையர்''(14) ''மந்தரநற் பொருசிலையா வளைத்துக்கொண்டார்''என்புழி மந்தரம்வில்லென்பது தேவாரத்தும் கூறப்படுகின்றது.(16) ''மந்தர மேருவில் லாவளைத் தான்'' என்புழி மந்தர மேருவென்பதற்கு மந்தரமு மேருவுமென்றோ, மந்தரமென்னும் பெயரையுடையமேருவென்றோ, மந்தரமலையென்றோ பொருள் கொள்ளல்வேண்டும். (17) ''இமயநட் டரவு சுற்றி, யத்தலை யலற முந்நீர் கடைந்தவர்'' என்பதன் விசேடவுரையில் ''மந்தரத்தின் றொழிலை இமயத்துக்கு ஏற்றினார், அது மலையரையனாதலின்; 'இமையவில் வாங்கிய' என்றார் பிறரும்'' என (சீவக. 963.) இவ்வுரையாசிரியரே எழுதியிருத்தலை நோக்கின், இங்கு எழுதியிருக்கும் உரையைவிட்டு மேருவின்றொழிலை இமயத்துக்குஏற்றினாரென்று கொள்ளல் வேண்டும். பெரியார்வாய்க் கேட்டுத் தெளிக.

1. (அ) ''இயக்குமிரதத்தினை யெதிர்ந்திகலின் முட்டிப், புயக்கவலி யின்றி மதம் பொங்குவிறல் வேழம்,
வியக்கவொ ரரக்கன்வளர் வெள்ளிவரை யூன்ற, வுயக்கமுட னோலிடுத லொப்புற முழங்கும்'' விநாயக. மயூரேசர்.87. (ஆ) ''ஐயிருதலையினரக்கர்கோமான்'' என்பது (இ) சீர்வகையடிக்கண் நேரீற்றியற்சீர் இரண்டும் வருதற்கும், (தொல். செய். சூ. 25. நச்.) (ஈ) சீர்வகை யடிக்கண் கலியினளவடி பதினோரெழுத்தான் வருதற்கும், (தொல். செய். சூ. 59. நச்.) மேற்கோள்.

2. (அ) நேரீற்றியற்சீர் கட்டளையடியல்லாத கலியடிக்கண் வருமென்பதற்கு, ''உறு புலியுருவேய்ப்பப்'' பூத்த வேங்கையை என்பது, மேற்கோள்; தொல். செய். சூ. 25. பே. (ஆ) ''உறுபுலி'' நாலடி. 193. ''வேங்கைப் பூவுக்கு வேங்கைப்புலி உவமையாகக் கூறப்படுதலை'' (இ) ''புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர்'' ஐங். 396. (ஈ) ''வேங்கை வீயுகு துறுக, லிரும்புலிக் குருளையிற் றோன்றும்'' குறுந். 47.

(பிரதிபேதம்) 1 தொடிபொலி.