208

இதன் பொருள்.


1(1) இமையவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தண
னுமையமர்ந் துயர்மலை யிருந்தன னாக


1. (அ) ''விராய்நிலை தளையு மொரூஉநிலை யிலவே'' எனபதற்குப் பிறவாகி விரவிய தளையும் நீக்குதலில்லை; அஃதாவது வெண்டளையு மாசிரியத்தளையும் விரவுதல் என்றுகூறி, ''இமையவில்.............................கோமான்'' என்பதை மேற்கோள் காட்டி'' இதில் முந்துற்ற விருசீரும் வெண்சீர் வெண்டளை, இரண்டாஞ் சீரொடு மூன்றாஞ்சீர் இயற்சீர் வெண்டளை, நாலாஞ்சீரொடு மற்றையடிமுதற்சீர்நிரை யொன்றாசிரியத்தளை, அரக்கர் கோமான் நேரொன் றாசிரியத்தளை. அஃதேல் நேரீற்றியற்சீர் கலிக்கண் வரப்பெறாதென்ற தென்னை? ஈண்டுக் கோமான் வந்ததாலெனின் அவ்விலக்கணங்கள் அத்தன்மையான் வரும் அடிக்கென்க. சிறுபான்மை வஞ்சித்தளை வருதலுங்கொள்க'' என்பர், இளம்பூரணர்; தொல். செய். சூ. 57. 'விராய்நிலை'.(ஆ) ''சிவபெருமான் மேருமலையை வில்லாகக் கொண்டாரென்பது பெருவழக்கு(1) ''செல்விடைப்பாகன் றிரிபுரஞ் செற்றுழிக்கல்லுயர் சென்னி யிமயவி னாணாகி''(2) ''மலை வில்லாக - இமயம் வில்லாக' பரி. வானாரெழிலி: 76 - 7; 5 : 24, உரை. (3) ''இமைய வில் வாங்கிய வீசன்'' கம்ப. கார்முக. 12.(4) இமயவிற் குரிசிலெய்தி" கூர்ம. இராமனவதரித்த, 81.(5) ''இமயவில் வளைய வாங்கித்,தவளவெண் முறுவல் கோட்டித் தரியலர் புரமட்டோற்கு'' உத்தரகோச. நளசக்கர. 34.(6) ''உமைநடுங்குற மேல்வரு மும்பலை யடர்த்த,விமைய வில்லினன்'' விநாயக. பிந்தியமயூரேசர். 213.(7) ''இமயத், தொல்லைப்பொருப்பு வில்விட் டரண்க டுகளாய்விளைத்தும்'' (8) 'இமயவெற்பாற், றெவ்வாறு கடந்த பரன்' சீகாழித்தல. பிரமபுர. 12. புறவமான. 30. என்று தமிழ் நூல்களிற் பயின்றுவருவதை நோக்கின் இமயமென்பதும் மேருவின் ஒரு பெயரோவென்று ஐயமுண்டாகிறது.(9) 'இமயத்தைக் கூறவேண்டுமிடத்து மேருக்குன்றத் தூருநீர்ச் சரவணத்து' மணி. (18) 92.(10) "ஐந்தலையுத்தி யரவுநா ணாக,மந்தரவில்லி னந்தணன்விட்ட, தீவாயம்பு" பெருங். (1) 43. 119-21. என்பதையும்(11) ''மந்தர நெடுமலை நடுவின் வாய்ந்தது,சுந்தரவேதிகை மருங்குசூழ்ந்தது,நந்திய நளிசினை நாவன் மாமர,மந்தரத் துடையதிவ் வவனி வட்டமே''(12) 'சந்திரருஞ் சூரியருந் தாரகையு நாண்மீனும்,வெந்திறல கோட்களுமா மெனவிளங்கி விசும்பாறாமந்தரத்தை வலஞ்சூழ்ந்து வருபவரு நிற்பவருஞ்,சுந்தரஞ்சேர் மணிமுடியாய் சுடர்பவருஞ் சோதிடரே'' சூளாமணி. மந்திரசாலை. 389. துறவு. 206. (13) ''சந்திரர் சூரியர் கோளவர் நாளவ ரல்லவராய், மந்தர மாமலை தன்னை

(பிரதிபேதம்) 1 இமயவில்.