207

(38.) இமையவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தண
னுமையமர்ந் துயர்மலை யிருந்தன னாக
வையிரு தலையி னரக்கர் கோமான்
றொடிப்பொலிதடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
5யெடுக்கல்செல்லா துழப்பவன் போல
வுறுபுலி யுருவேய்ப்பப்பூத்த வேங்கையைக்
கறுவுகொண் டதன்முதற்குத்திய மதயானை
நீடிரு விடரகஞ் சிலம்பக்கூய்த்தன்
கோடுபுய்க் கல்லா துழக்கு நாடகேள்;
10ஆரிடையென்னாய்நீ யரவஞ்சாய் வந்தக்கா
னீரற்ற புலமேபோற்புல்லென்றாள் வைகறை
கார்பெற்ற புலமேபோற்கவின்பெறு மக்கவின்
றீராமற் காப்பதோர்திறனுண்டே லுரைத்தைக்காண்;
14இருளிடையென்னாய்நீ யிரவஞ்சாய் வந்தக்காற்
பொருளில்லானிளமைபோற் புல்லென்றாள் வைகறை
யருள்வல்லானாக்கம்போ லணிபெறு மவ்வணி
தெருளாமற்காப்பதோர் திறனுண்டே லுரைத்தைக்காண்;
18மறந்திருந்தாரென்னாய்நீ மலையிடை வந்தக்கா
லறஞ்சாரான்மூப்பேபோ லழிதக்காள் வைகறை
திறஞ்சேர்ந்தானாக்கம்போற் றிருத்தகு மத்திருப்
புறங்கூற்றுத்தீர்ப்பதோர்பொருளுண்டே லுரைத்தைக்காண்;
எனவாங்கு;
23நின்னுறுவிழுமங் கூறக் கேட்டு
வருமே தோழி நன்மலை நாடன்
வேங்கைவிரிவிட நோக்கி
வீங்கிறைப் பணைத்தோள்வரைந்தனன் கொளற்கே.

இஃதுஇரவுக்குறிவந்து நீங்குந் தலைவனை எதிர்ப்பட்டுத் தோழி தலைவியது நிலைமைகூறி அவனை வரைவுகடாவ, அவன் வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு வரைவுமலிந்துகூறியது.



தினந்தீர் களிற்றிற் பெயர்ந்தோ னின்றுந், தோலாவா றில்லை தோழிநாஞ் சென்மோ, சாயிறைப்பிணைத் தோட் கிழமை தனக்கே, மாசின் றாதலு மாறியா னேசற், றென்குறைப் புறனிலைமுயலு, மண்கணாளனை நகுகம் யாமே''. அகம். 32.