206

இதுவும், வேறுபொருள் நுதலுமென்றலின், வேறுமொரு பொருள்நுதலுமாறு கூறுதும். ''அறக்கழி வுடையன பொருட்பயம் 1படவரின் வழக்கென வழங்கலும் 2பழித்தன் றென்ப'' என்னும் (1) பொருளியற் சூத்திரத்தால் அறக்கழிவுடையனவாக அவன்மார்பில்வீழ்ந்து மெய்யறியாதேன்போற் கிடந்தேனெனக் கூறினாள். இது பொருட்பயன் தந்தவாறென்னையெனின் தலைவன் குறையுற்றுநின்றமையை முன்னர் மெய்யாக வழிநிலைபிழையாமற்கூறிப், பின்னர்ப் படைத்துமொழிந்து பொய்யேகூறுகின்றாள், வழிநிலை பிழைப்பக் கூறினாள். அது பொருட்பயன் 3தருதற்கென்க. அஃதென்னை? தலைவன் குறை புலப்படுத்தாது வருந்துகின்ற காலத்து அதனைத் தனக்குப் புலப்படுவித்துக்கொண்டே அவனை ஆற்றுவித்தற்பொருட்டு 4அறக்கழிவுடையன கூறித், தானுந் தலைவனும் இவ்வாறே செறிந்தமை உணர்த்தலின், மறைபுலப்படுத்துங் கருத்தினளாந் தலைவியென்னும் பொருட்பயன் தந்தே நின்றதாயிற்று. இதனான் இதுவும் ''வழக்கென வழங்கலும் பழித்தன்று'' 5என ஆசிரியரும் அமைத்தார். இங்ஙனம் பொருட்பயன் தருதல் : ''நெருந லெல்லை யேனற்றோன்றித், திருமணி யொளிர்வரும்'' என்னும் (3) அகப்பாட்டில், ''சிறுபுறங் கவையின னாக..................கை பிணிவிடா'' என்ற பொருளானும் உணர்க.

இதனால், தலைவிக்கு நாணம் பிறந்தது. ( 1 )


இனிக்கரந்தொழுகி உடம்படுக்குமென்பதூஉ மொரு பொருளாயிற்று. இது 'அறக்கழிவுடையன' (தொல். பொருளி. 24) என்னும் பொருளியற் சூத்திரத்தில் வழுவமைத்தவாறுங்காண்க. என்பர்.

1. தொல். பொருளியல். சூ. 24. நச். இதனுரையில் ''கயமலருண்கண்ணாய்..........................அங்கணுடையனவனென்பதனுள் 'மெய்யறியா தேன்போற் கிடந்தேன்' என்புழி முன்னர் மெய்கூறி வழிநிலை பிழையாமனின்று பின்னர்ப்பொய்யாக வழிநிலை பிழைத்துக்கூறியது வழுவேனும் இவளுந் தவைனும் இவ்வாறே செறிந்தமை யுணர்த்தலின் மறைபுலப்படுத்துங் கருத்தினளாந் தலைவியென்பது பயனாம்'' என்பது காணப்படுகின்றது.

2. "நெருந லெல்லை யேனற் றோன்றித், திருமணி யொளிர்வரும் பூணன் வந்து, புரவலன் போலுந் தோற்ற முறழ்கொள, விரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றிச், சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண், குளிர்கொ டட்டை மதனில புடையாச், சூரா மதளிரி னின்ற நீமற், றியாரை யோவெம் மணங்கியோ யுண்கெனச், சிறுபுறங் கவையின னாக வதற்கொண், டிகுபெயன் மண்னின் ஞெகிழ்பஞ ருற்றவென், னுள்ளவ னறித லஞ்சி யுள்ளில், கடிய கூறிக் கைபிணி விடாஅ, வெரூஉமான் பிணையி னொரீஇ நின்ற, வென்னுரத் தகைமையிற் பெயர்த்துப்பிறி தென்வயிற்,
சொல்ல வல்லிற்று மிலனே யல்லாந்,

(பிரதிபேதம்) 1 வரினே, 2 பழித்தலன்றென்ப, 3 தருதற்கு அஃதென்னை, 4அறத்திற்கழிவுடையன, என்று.