205

மேலென்றது அவன் மார்பிலென்னும் பொருட்டு (1) ''தானுற்ற நோயுரைக் கல்லான் பெயருமற் பன்னாளும்'' என்றது தலைவன் இளிவந்தொழுகுதல் 1அக்காரணத்தான் யானுந் துயருழப்பே 2னென்றலிற் பிறன்கட் டோன்றிய இளிவரல் பொருளாக அவலச்சுவை பிறந்தது. (2) 'முன்னத்திற் காட்டுதலல்லது' என்றது 3நிறையுடைமையென்னும் ஒப்புமை. 'பெண்ணன்றுரைத்த னமக்காயின்' என்பதும் அது. இஃது 4''இயல்'' (3) என்றதனாற் பன்னீரடியி னிகந்தும் தையானன்றெனத் தளைவிரவியும் வந்த கலிவெண்பா.


1. (அ) ''தானுற்ற............பன்னாளும்'' எனத் தலைமகன் இளிவந்தொழுகுவது காரணமாக, ''சேயேன் மன்...................ருழப்பேன்'' என்றமையின், இது பிறன்கட் டோன்றிய இளிவரல்பொருளாக அவலச் சுவை பிறந்தது. இது கருணையெனவும் படுமென்றனர் பேராசிரியரும்; தொல். மெய்ப். சூ. 5; (ஆ) இ - வி. நூலாரும் இதனைப் பின்பற்றுவர்; இ - வி. சூ. 578. (இ) 'இற்ற தென்னாவி' என்னுஞ்செய்யுளின் விசேடவுரையில் 'கண்கள் வெம்பனி யுகுத்த' என்பதற்கு ''ஊடல் முழுதுந்தீராமையின் வெம்பனி யாயிற்று...........(தலைமகன்) அடியில் வணங்கிய பின்னும் ஊடல் தீராது அழுதாளென்றல் கற்பிற்குப்பொருந்தாது. 'இளிவேயிழவே' என்னுஞ் சூத்திரத்தில் அழுகையாவது அவலமும் கருணையு மாதலின், ''கயமலருண் கண்ணாய்'' என்னுங்கலியில் 'தானுற்ற......................யானுந்துயருழப்பேன்' என்றவழி, பிறன்கட்டோன்றிய இளிவரல் பொருளாக அவலந் தோன்றினாற்போல, இதனையும் பிறன்கட்டோன்றிய இளிவரல் பொருளாகப் பிறந்த கருணையென்று கொள்க; வணங்குதல், அவற்கு இளிவரவு; அதனாற் கருணைபிறந்தது. அழுகை ஈண்டுக் கருணை, இதனான் ஊடறீரக்கருதினாளாம்'' என்பர், நச்; சீவக. 2508.

2. "கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபுமுன்னத்திற் காட்டுதலல்லது தானுற்றநோயுரைக் கல்லான் பெயருமற் பன்னாளும் பாயல் பெறேஎன் படர் கூர்ந்து' என்புழி முன்னத்திற்காட்டுதலல்லது தானுரையானென்பது தலைமகனிறையுடைமை கூறியவாறு; 'அவன் வயிற்; சேயேன்மன் யானுந் துயருழப்பேன்' எனத் தன்னிறையுடைமை காரணத்தாற் காமக்குறிப்பு நிகழ்ந்தவாறு. 'பெண்ணன்றுரைத்த னமக்காயின்' என்பதும் அது. இது தோழிகூற் றன்றோவெனின், அதுவுந் தலைமகள் குறிப்பெனவே படுமென்பது முன்னர்க் கூறினாமென்பது'' தொல். மெய்ப். சூ. 25. பே.

3. தொல். செய். சூ. 153. இச்சூத்திரத்தினுரையில் நச்சினார்க்கினியர் இச்செய்யுளைப் பன்னீரடியினிகந்தும் தளைவிரவியும் வந்த கலிவெண்பாட்டிற்கு மேற்கோள்காட்டி, இது தையா னன்றென்று எனமெய்யினும் பொய்யினும் வழிநிலைபிழையாமற் றோழி தலைவிக்குரைத்தது. இதுகேட்டுத் தலைவன் தன்னை நயந்தானென இவள்கருதினாள் போலு மெனத்தலைவி கருதுமாற்றாற் றோழிகூறியவாறும் இதனானே தலைவி

(பிரதிபேதம்) 1காரணத்தால், 2ஆதலின், 3நிறைவுடைமை, 4அயலென்றதனால்.