203

15 (1) யைய சிறிதென்னை (2) யூக்கி யெனக்கூறத்
தையா னன்றென் றவனூக்கக் கைநெகிழ்பு
(3) பொய்யாக வீழ்ந்தே னவன்மார்பின் (4) வாயாச்செத்
(5) தொய்யென வாங்கேயெடுத்தனன் கொண்டான்மேன்
மெய்யறியா தேன்போற்கிடந்தேன்மன் னாயிடை
20மெய்யறிந் (6)தேற்றெழுவே னாயின்மற் றொய்யென
வொண்குழாய்செல்கெனக் கூறி விடும்பண்பி
1னங்கணுடைய னவன்.

இது ''நாற்றமுந்தோற்றமுமொழுக்கமு முண்டியுஞ்,செய்வினைமறைப்பினுஞ்செலவினும்பயில்வினும்,புணர்ச்சியெதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉ,முணர்ச்சியேழினுமுணர்ந்த பின்றை'' (7)தன்னை அவள்மறையாமை


1. (அ) 'ஐயசிறிதென்னை யூக்கி' என்பது முன்னிலையீற்றுஇகரம் சிறு பான்மை ககரம்பெற்ற வருமென்பதற்கும் (தொல். வினை. சூ. 26. சே.) (ஆ) ககரம்பெற்று இகரம் ஏவல்கண்ணியே நிற்குமென்பதற்கும், (தொல். வினை. சூ. 26. நச்.) (இ) ககரம் சிறுபான்மை எதிர் காலங்காட்டுமென்பதற்கும். (இ- வி. சூ. 49.) (ஈ) இகரம் ககரமூர்ந்து எதிர்காலம் பற்றி ஏவற்பொருண்மைக்கண்வரு மென்பதற்கும்: (இ - வி. சூ. 238.) மேற்கோள்

2. ஊக்குதல் ஆட்டுதல்; (அ) ''தானூக் கினனவ் வூசலை வந்தே'' கலி. 131 : 46. (ஆ) ''மடவோர்க்கியற்றியமாமணியூசல், கடுவனூக்குவதுகண்டுநகை யெய்தியும்'' மணி. 19 : 73 - 74. (இ) ''தழைக்கயிற் றூசல் விருப்புற் றூக்கியும்'' பெருங். (2) 14 : 27. (ஈ) ''சோர்பனிமுகத்து மென்கால் சுழலவார் விசிறியூக்க'' பூவாளுர். இந்திரனருச்சனை. 14.

3. (அ) அறக்கழிவுடையனவற்றுள், தோழிதலைவிக்குப் படைத்து மொழிதலுக்கு, ''பொய்யாக வீழ்ந்தே னவன்மார்பின்'' என்பது மேற்கோள்; தொல். பொருளியல். சூ. 24. நச். (ஆ) ''அலங்கலங் குன்ற மன்னா னணிவரையகல மூழ்கிநலங்கெழு கலவைச் சாந்து நானமு மழிதலோடுமிலங்கொளி வயிரப் பைம்பூ ணிளமுலை வடுக்கண் டேங்கிப்பொலங்கொடி நாணி னோடும் பொய்த்துயில் கூர்ந்தா ளன்றே'' நைடதம். மணம். 42.

4. எடுத்தோதப்படாத உரிச்சொற்களுள் செத்தென்பது குறிப்புணர்த்தி வருதற்கு ''வாயாச்செத், தொய்யென வாங்கேயெடுத்தனன்'' என்பது மேற்கோள்; தொல். உரி. சூ. 79 'அன்ன' தெய்.

5. ''ஒய்யென'' பொருந. 152 : முல்லை. 83; அகம். 86 : 29, 165 : 3.

6. 'ஏற்றெழுதல்' கலி. 12 : 8-ஆம் அடிக்குறிப்புப் பார்க்க.

7. தொல். கள. சூ. 23.

(பிரதிபேதம்) 1 இன்கண், நன்கண்.