202

5நோயுரைக் கல்லான் பெயருமற் பன்னாளும்
பாயல் பெறேஎன் படர்கூர்ந் தவன்வயிற்
சேயேன்மன் யானுந் துயருழப்பே னாயிடைக்
(1) கண்ணின்று கூறுதலாற்றானவனாயிற்
பெண்ணன் றுரைத்த னமக்காயினின்னதுஉங்
10(2)காணான் கழிதலு முண்டென் (3) றொருநாளென்
றோணெகிழ் புற்றதுயராற் றுணிதந்தோர்
நாணின்மை செய்தேனறுநுதா லேன
லினக்கிளி யாங்கடிந் தோம்பும்புனத்தய
லூசலூர்ந் தாட வொருஞான்று வந்தானை

மாரீறும்வினையொடுமுடியும் வேற்றுமையும் பிறவும் வினையெச்சமாவான் செல்லுமாகலானும், அல்லதூஉம் 'கண்ணியன் வில்லன்' எனவரும் வினைக்குறிப் முற்றாய்த்(?) திரிதற்கு ஏற்பதோர் எச்சமின்மையானும் அஃது இலக்கணமன்றென்க. இஃது ஆசிரியர் தொல்காப்பியனார்க்குங் கருத்தாதல் சேனாவரைய ருரையானுணர்க'' இ - வி. சூ. 250.

1. (அ) கண்ணென்னும் பொருளாவது கண்ணென்னும் இடைச்சொல்லானுணர்த்தப்படும் இடப்பொருண்மை என்றுகூறி, ''கண்ணின்றுகூறுதலாற்றா னவனாயின்'' என்பதை மேற்கோள் காட்டுவர், சேனாவரையர்; தொல். வேற். சூ. 21. (ஆ) நச்சினார்க்கினியர் இச்சூத்திரவுரையில் இக்கருத்தை, மறுத்து, இப்பகுதியில் கண்ணென்பதற்கு என் கணின்றென என்னென்பது தோன்றாவெழுவாயாய் நின்று கண்ணுருபு ஏற்றதென்று பொருள்கூறுவர். (இ) வேறுரையாசிரியரும் இவ்வாறே கூறுவர். தொல். வேற். சூ. 21. (ஈ) ''கண்ணின்றொருவர், குணனேயுங் கூறற்கரிதால்'' நாலடி 353. (உ) ''கண்ணின்று கண்ணறச் சொல்லினும்'' குறள். 184.

2. ஆண்பாலின் வினைமுற்று வினையெச்சமானதற்கு ''காணான் கழிதலுமுண்டென் றொருநாள்'' என்பது மேற்கோள். நன். வினை. சூ. 32. இரா. மயிலை. இ - வி. சூ : 250. விருத்தியுரையிலும் இராமானுசகாண் டிகையிலும் இலக்கணவிளக்கவுரையிலும் இது கூடியும் குறைந்தும் பிழைபட்டு வந்துள்ளது.

3. தோழி தலைவியுறுப்பினைத் தன்னுறுப்பாகக் கூறப்பெறுமென்னும் வழுவமைதிக்கு ''ஒருநாளென், றோணெகிழ்புற்ற துயராற் றுணிதந்து'' என்பது மேற்கோள்; தொல். பொருளியல். சூ. 27. ந.