முருகக்கடவுள் துணை கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியருரையும். இரண்டாவது குறிஞ்சிக்கலி. (37.) | (1) கயமல ருண்கண்ணாய் காணா யொருவன் வயமா னடித்தேர்வான் போலத் தொடைமாண்ட (2) கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு முன்னத்திற் காட்டுத லல்லது தானுற்ற |
1. (அ) ''இருவர்கண் டால்வரு மேதமென் றெண்ணி யெனக்கெதிரே, வருவர்வந் தாலும்தம் வாய்திற வார்தஞ்சை வாணன்வெற்பி, னொருவர் நஞ் சார லுழையக லார்தழை யுள்ளதெல்லாந், தருவர்வம் பார் முலை யாயென்கொ லோசெயத் தக்கதுவே'' தஞ்சை. 117. (ஆ) ''கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர்'' சிலப். 12 : 'கயமலர்'. 2. (அ) முற்றுத்திரிசொல் வினையெச்சமாய் வருதற்கு ''கண்ணியன் வில்லன் வரும்'' என்பது மேற்கோள்; தொல். எச்ச. சூ. 61. சே. (ஆ) இதற்கு, 'கண்ணியனாய்த் தன் வில்லைஏந்தி வரும்' எனப் பொருளுங் கூறுவர். தெய்; தொல். எச்ச. சூ. 58. 'வினையெஞ்சு' (இ) ''முற்றுச்சொல் திரிந்து எச்சமாமென்னாது எச்சமே முற்றாய்த்திரியுமென்று ஓதிற் படும்இழுக்கு என்னையெனின், இருதிணை ஐம்பான் மூவிடத்திற்கும் பொதுவாகிய வினை நிகழ்ச்சியன்றே எச்சமாவன? அவை அவ்வாறன்றி முற்றுச்சொற்கு ஓதிய ஈற்றவாய் இருதிணை யைம்பான் மூவிடமும் உணர்த்தலின் முற்றுச்சொல்லே எச்சமாய்த் திரிந்தன எனப்படும்; எச்சம் முற்றாய்த் திரிந்தனஎனப்படா; ஆதலான் அவ்வாறு ஓதினாரென்க. அவ்வாறன்றி வினைகோடன் மாத்திரத்தான் வினையெச்சமெனின்,
|