யுண்டாக்க, தேனினம் கயங்கள் சூழ்ந்த இளமரக்காவில் மணத்தையுடைய மலர்களை வாச்சியங்களை எழுப்பின ஓசைபோல எவ்விடமும் 1இம்மென்னும் ஒசை 2பிறக்கும்படியாகச் சத்திக்க, மரங்கள் சூட உரியாரை ஆராய்ந்து நாற்றத்தாலே 3தம்மிடத்தே தம்மிடத்தே அழைப்பனபோல மலர்கள் அலர, கரியகுயில்கள் கூவ, பெரிய நீர்த்துறைகள் பூவால் அழகுபெற வந்தது; இக்காலம் இங்ஙனம் முதிர்ந்த அளவிலும் நங்காதலரோ வாரார்; 4எ - று. 12 (1) பாஅய்ப் பாஅய்ப் 5 பசந்தன்று நுதல் சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள் எ - து : ஆதலால் எனது நுதல் பசப்பொழுகப் பரந்து பரந்து வந்து பின்னர் முழுக்கப்பசந்தே விட்டது; என் தோள்கள் ஒழுக மெலிந்து மெலிந்து வந்து பின்னர் மிகவும் மெலிந்தேவிட்டன; எ - று. 14 (2) நனியறல் வாரும் பொழுதென வெய்ய பனியறல் வாருமென்கண் எ - து : என் கண்கள் இக்காலம் மிகவும் அறலொழுகுமென்று கருதி அதற்கெதிரே வெய்ய நீர் அறுதியுடைத்தாய் ஒழுகாநிற்கும்; எ - று. 16 மலையிடைப் போயினர் 6வரனநசைஇ நோயொடு முலையிடைக் கனலுமென் னெஞ்சு எ - து ; என்னெஞ்சு மலையிடத்தே போனவருடைய 7வரத்தை நச்சுகையினாலே தோன்றிய காமத்தீயாலே என்னுடைய முலையெல்லாம் காந்தாநிற்கும்; எ - று. நசைஇயென்னுஞ் செய்தெனெச்சம் காரணகாரியப் பொருட்டாய்நின்றது. தோன்றியவென வருவிக்க. அது நச்சின நோயெனப் பெயரெச்சமாகாது. 18 காதலிற் பிரிந்தார் கொல்லோ வறிதோர் தூதொடு மறந்தார் கொல்லோ நோதகச் காதலர் காதலுங் காண்பாங் கொல்லோ துறந்தவ (3) ராண்டாண் டுறைகுவர் கொல்லோ யாவது
கென்னும் சீவக. 2035. பொருள்காணப்படுதலாலும் இப்பொருளே சிறந்ததாகத் தோற்றுதலாலும் கானமென்றே கொள்ளப்பட்டது. 1. பாய்தல் பரத்தல் என்னும் பொருளில் வருதற்கு ''பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்றுநுதல்'' என்பது மேற்கோள்: தக்க. தாழிசை. 3. 'சககோடி' 2. ''என் கண்போ, லிகுபறல் வாரும் பருவத்தும் வாரார், மிகுவது போலுமிந் நோய்'' கலி. 33 : 16 - 21. 3. ''ஆண்டாண் டுறைதலு மறிந்த வாறே'' முருகு. 246. (பிரதிபேதம்) 1 றிம்மென்னும், 2 பிறக்கும் படியாக மரங்கள், 3 தன்னிடத்தே தன்னிடத்தே, 4 ஆதலால் எனதுபநுதல்..................... சந்தேவிட்டது, 5 பசந்தாறு நுதல், 6 வாய்நசையி, 7 வராத்தை.
|