197

வடி (1) நரம் பிசைப்பபோல் வண்டொடு சுரும்பார்ப்பத்
(2) தொடிமகண் முரற்சிபோற் றும்பிவந் திமிர்தர
5 வியனெழீஇ யவைபோல வெவ்வாயு மிம்மெனக்
கயனணி பொதும்பருட் கடிமலர்த் தேனூத
மலராய்ந்து வயின்வயின் விளிப்பபோன் மரனூழ்ப்ப
விருங்குயி லாலப் பெருந்துறை கவின்பெறக்
(3) குழவி வேனில் விழவெதிர் கொள்ளுஞ்
10 சீரார் செவ்வியும் வந்தன்று
வாரார் தோழிநங் காத லோரே 1

எ - து : தோழீ ! (4) காமனுக்கு நிகழ்த்தும் விழவை எதிர்கொள்ளும் இளவேனிற் செவ்வியும், கொடிய வலியினையுடைய கலப்பைப்படையினை யுடைய நம்பி மூத்தபிரானுடைய துழாய்மாலைபோல வெண்கடம்பின் உயர்ந்த இடத்தே ஆராவரிக்கும் மயில்களனைத்துந் தங்குஞ்சீர்மையுடையவாய் அதிலே வண்டோடே சுரும்புகளும் வடித்த நரம்புகள் ஒலிப்பனபோல ஆரவாரிப்ப, தொடியினையுடைய விறலியர் (5) கானத்திற்போலே தும்பிகள்வந்து ஒலித்தலை


1. யாழொலி வண்டினொலிக்கு உவமையாதலை, கலி. 32 : 9-ஆம் அடியாலும் அதன்குறிப்பாலும் சுரும்பினொலிக்கு உவமையாதலை, கலி. 34 : 16-ஆம் அடியாலும் அதன் குறிப்பாலும் உணர்க.

2. 'சுரும்பார்க்குங் குரலினோ டிருந்தும்பி யியைபூத, வொருங்குட னிம்மென விமிர்தலிற் பாடலோ, டரும்பொருண் மரபின்மால் யாழ்கேளாக் கிடந்தான்போற், பெருங்கட றுயில்கொள்ளும் வண்டிமிர் நறுங்கானல்'' கலி. 123:2- 5.

3. (அ) ''குழவியென்பது ஓரறி வுயிர்க்கன்றியும் பொழுதின்கண்வருதற்கு 'குழவிவேனில்' என்பது மேற்கோள்; தொல். மர. சூ. 24. பே. (ஆ) ''குழவியென்பது பருவத்துக்கு முரித்தென்பர், மயிலைநாதர்; நன். பொது. சூ. 37. மயிலை.

4. (அ) ''ஆனா விருப்போ டணியயர்பு காமற்கு, வேனில் விருந்தெதிர் கொண்டு'' கலி. 92 : 67 - 68.
(ஆ) ''வானுயர் சோலை தோறு முருகுவாய் மடுத்து வீழுந், தேனொடு சுரும்பும் வண்டும் புதிதுண்டு தெவிட்டி யார்ப்பக், கானமர் குழலி னார்தங் கணவர்பாற் புலவிதீர, வேனில் வேட் குலகம் யாவும் விழவயர்ந் திட்ட வன்றே'' நைடதம். இளவேனில். 5.

5. ஏடுகளில் தாளத்திற்போலேயென்றும் ஐயுறும்படி உள்ளது. முரற்கை யென்பதற்குத் தாளமென்ற பொருளும், மலை. 390-ஆம் அடியிற் காணப்படுகின்றது. முரன்றுபாட வெண்பதற்கு ஆளாபஞ்செய்து பாடும்படியென்றும் சீவக. 1959. முரன்றாற்கென்பதற்குப் பாடினாற்

(பிரதிபேதம்) 1 பாஅய்..............................நுதல் எ - து :