196

10சீரார்செவ்வியும்வந்தன்று
வாரார்தோழிநங்காதலோரே;
12பாஅய்ப்பாஅய்ப் பசந்தன்று நுதல்
சாஅய்ச் சாஅய்நெகிழ்ந்தன தோள்;
14நனியறல் வாரும் பொழுதென வெய்ய
பனியறல் வாருமென் கண்;
16மலையிடைப்போயினர் வரனசைஇ நோயொடு
முலையிடைக் கனலுமென் னெஞ்சு;
18காதலிற் பிரிந்தார் கொல்லோ வறிதோர்
தூதொடு மறந்தார் கொல்லோ நோதகக்
காதலர் காதலுங் காண்பாங் கொல்லோ
துறந்தவ ராண்டாண் டுறைகுவர் கொல்லோ யாவது
நீளிடைப் படுதலு மொல்லும் யாழநின்
வாளிடைப் படுத்த வயங்கீ ரோதி
நாளணி சிதைத்தலு முண்டென நயவந்து
கேள்வி யந்தணர் கடவும்
வேள்வி யாவியி னுயிர்க்குமென் னெஞ்சே.

இது காலங்கண்டு ஆற்றாத தலைவியது நிலைமைகண்டு, ஆற்றாத தோழி, தான் ஆற்றாளாய் அவட்குக் கூறியது.

இதன் பொருள்.

(1) கொடுமிட (2) னாஞ்சிலான் றார்போன் (3) மராத்து
நெடுமிசைச் சூழு மயிலாலுஞ் சீர


1. (அ) ''விறன்மிகு வலியொலி பொலிபகழ் புழுதியி, னிறனுழு வளைவாய் நாஞ்சி லோனும்'' பரி. 13 : 32 - 3.
(ஆ) ''வலியொத் தீயே வாலியோனை'' புறம். 56 : 12. (இ) ''விறல் வெள்ளையாயவனென்றாள்'' சிலப். 17. 'மாயவ' (ஈ) ''புரவல வின்னுநும் பொன்னஞ் சூட்டெயிற், றிருநகர் தென்றலை சேணி லோங்குறா, விரிதிரைக் கங்கையில் வீழ்தல் போன்றுமற், றொருகுழை யவன்வலி யுணர்த்து கின்றதால்'' பாகவதம். (10) சாம்பன் மணம். 54. என்பவைகளும் பலதேவன் பலராமன் என்னும்பேர்களும் இங்கே அறிதற்பாலன.

2. (அ) ''வளைநாஞ்சி லொருகுழை யொருவனை.'' (ஆ) ''வள்ளணிவளை நாஞ்சிலவை'' பரி. 1 : 5. 15 : 57.
(இ) ''மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்'' சிலப். 14 : 9.

3. ''மராஅ மயிலின் மயங்குபு தூங்குங், குழாஅ மகளிர் குரவை காண்மின்'' பெருங். (1) 40 : 145 - 6.