195

காமர் கடுந்திண்டேர்ப் (1) பொருப்பன்
(2) வாய்மை யன்ன வைகலோடு புணர்ந்தே

எ - து : தம்மை நினைக்கும் பொழுதெல்லாம் நெஞ்சழியும் நினது வருத்தத்தையுடைய காமநோய்க்கு இளைப்பாறுதலாகிப் பறவையினது பறத்தற் றன்மையையுடைத்தாகிய விருப்பத்தையுடைய கடிய திண்ணிய தேரையுடைய பொதியின்மலையினையுடைய பாண்டியனுடைய தப்பாத மொழியையொத்த குறித்த எல்லைதப்பாத நாளோடே கூடி நம்மை 1இகழ்ந்திருத்தல் நீங்கின காதலர் நம்மைக்கூடுதலைத் தந்தார்; 2 எ - று.

இது சுரிதகம்.

இதனால், தலைவிக்குப் புணர்வாகிய உவகை பிறந்தது.

இஃது எட்டடித்தரவும் நான்கடித்தாழிசையும் தனிச்சொல்லும் நான்கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. ( 34 )

(36.)கொடுமிட னாஞ்சிலான் றார்போன் மராத்து
நெடுமிசைச்சூழு மயிலாலுஞ் சீர
வடிநரம் பிசைப்பபோல் வண்டொடு சுரும்பார்ப்பத்
தொடிமகண் முரற்சிபோற் றும்பிவந்திமிர்தர
வியனெழீஇ யவைபோல வெவ்வாயு மிம்மெனக்
கயனணி பொதும்பருட் கடிமலர்த் தேனூத
மலராய்ந்து வயின்வயின்வினிப்பபோன் மரனூழ்ப்ப
விருங்குயி லாலப்பெருந்துறை கவின்பெறக்
குழவி வேனில் விழவெதிர்கொள்ளுஞ்

1. பொருப் பென்னும் பெயர்பொதியின் மலைக்குப் பயின்று வருதலை, (அ) ''வரைத்தா ழருபிப் பொருப்பிற்பொருந'' மது. 42. (ஆ) ''திண்டேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்'' (இ) ''பலர் புகழ்திருவிற் பசும்பூட்பாண்டிய, னணங்குடையுயர்நிலைப்பொருப்பிற்கவான்''அகம். 137: 14. 338: 5-6. (ஈ) ''வகையமை தண்டாரான் கோடுயர் பொருப்பின்மேல்'' (உ) ''சினையலர் வேம்பின் பொருப்பன்'' கலி. 57 : 16. 92 : 27. (ஊ) ''பூண்டாழ் மார்பிற் பொருப்பிற் கோமான், பாண்டியன்'' (தொல். அகத். சூ. 54. மேற்கோள்.) (எ) ''தென்னனுயர்பொருப்புந் தெய்வ வடமலையும்'' பெரியதிருமடல். 6. (ஏ) ''பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து'' வில்லி. சிறப்புப். 1. என்பவையும் வலியுறுத்தும்.

2. (அ) ''காலை யன்ன சீர் சால்வாய் மொழி'' பதிற். 21 : 4. (ஆ) ''வாய்மை வயங்கிய வைகல்'' பரி. 2 : 54.
(இ) ''வெயிலினு மெய்யன வுரைத்தன் மேயினாள்'' கம்ப. காட்சி. 39.

(பிரதிபேதம்) 1 இகழ்ந்திருக்க நீங்கின, 2 இனி ஆற்றென்றாள்.