194

(17). (1) 1 நிலனாவிற் ரிரிதருஉ நீண் (2) மாடக் கூடலார்
2புலனாவிற் பிறந்தசொற் புதிதுண்ணும் பொழுதன்றோ
(3) பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்காற்
3சுடரிழாய் நமக்கவர் வருதுமென் றுரைத்ததை

எ - து : விளங்குகின்ற இழையினையுடையாய்! இறந்து படுவேமோ ஆற்றியிருப்பேமோவென்று பலவற்றையும் ஆராயும் நெஞ்சினையுடையேமாய் நாம் வருந்தி விடுக்க, அவர் நமக்கு வருவேமென்று உரைத்த காலம், நிலத்தி லுள்ளார் நாவிலே வழங்கும் நீண்ட மாடங்களையுடைய மதுரையிலுள்ளார் அறிவினையுடைய சான்றோர் நாவிற் பிறந்த கவிகளின் புதுமையைக் கொண்டாடும் இவ்விளவேனிற்காலமல்லவோ? எ- று.

"வேந்துறு தொழிலே யாண்டின தகமே" (4) என்பதனான் இது பின்பனியிற் பிரிந்து இளவேனிலுள் வருதல்குறித்தலின் இருதிங்களிடையிட்டது.

இவை மூன்றும், தாழிசை.

எனவாங்கு.

எ - து : எனச்சொல்லி, எ - று.

ஆங்கு, அசை,

இது தனிச்சொல்.

22 உள்ளுதொ றுடையுநின் னுயவுநோய்க் குயிர்ப்பாகி
4 யெள்ளறு காதல ரியைதந்தார் புள்ளியற்


1. ''உரைவாய நகர்'' என்பதற்கு உரையிடத் தனவாகிய நகர் என்று பொருள்கூறி ''நிலனாவிற்றிரிதரூஉம்'' என்னும் பகுதியை மேற்கோள் காட்டினார், நச்; சீவக. 2558.

2. (அ) ''மாடமலி மறுகிற் கூடற் குடவயின்'' முருகு. 71. (ஆ) ''மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்'' மது. 429.
(இ) ''நீண்மாடக் கூடல்'' பரி. 20 : 106. (ஈ) ''மாடமலி மறுகிற் கூட லாங்கண்'' அகம். 346 : 20;
(உ) ''மாட மதுரையும்'' புறம். 32 : 5. (ஊ) ''மாடமதுரை புகுந்தனன்'' (எ) ''மாட மதுரையும்'' (ஏ) ''மாடமதுரை யகத்துச் சென்று'' (ஐ) ''மாட மதுரை மாநகர் புகுகென'' சிலப். பதிகம்: 20, 8: 3,6:76. 15: 112. (ஒ) ''மதிமலி புரிசை மாடக் கூடற், பதிமிசை'' பதினொராந்.

3. ''பலநினைந் தினையும் பைத னெஞ்சின்'' கலி. 126. 19.

4. தொல். கற்பி. சூ. 48. இதனுரையிலும் இக்குறிப்புடன் இச்செய்திக்கே ''நிலனாவிற் றிரிதரூஉம்'' என்னும் இத்தாழிசை மேற்கோள்.

(பிரதிபேதம்) 1 நிலநாவில், 2 புலநாவில், 3 சுடர்நுதால், 4 எள்ளுறு.