(9). | (1) வண்ணவண் டிமிர்ந்தானா வையைவா ருயரெக்கர்த் (2) தண்ணருவி நறுமுல்லைத் தாதுண்ணும் பொழுதன்றோ கண்ணிலா நீர்மல்கக் கவவிநாம் விடுத்தக்கா லொண்ணுதா னமக்கவர் வருதுமென் றுரைத்ததை |
எ - து: ஒள்ளிய நுதலினையுடையாய் ! நாம் நிறுத்தினவளவில் நில்லா வாய்க் கண் நீர்மல்க முயங்கி விடுக்க, அவர் நமக்கு வருவேமென்று உரைத்த காலம், நிறத்தையுடைய வண்டுகள் ஆரவாரித்து, இன்பம் அமையாத வையை யாற்றில் ஒழுங்குபட்ட உயர்ந்த இடுமணலிடத்துக் குளிர்ந்த அருவிநீராலே வளர்ந்த நறிய முல்லைப்பூவிற் றாதையுண்ணும் இவ்விளவேனிற் கால மல்லவோ? எ - று. விடுத்தக்கால், காலீற்றுவினையெச்சம். 13 மல்கிய துருத்தியுண் (3)மகிழ்துணைப் புணர்ந்தவர் | (4) வில்லவன்விழவினுள் விளையாடும் பொழுதன்றோ | (5) வலனாக வினையென்றுவணங்கிநாம் விடுத்தக்கா | லொளியிழாய்நமக்கவர் வருதுமென் றுரைத்ததை |
எ - து: ஒளியிழாய்; நீர் எடுத்துக்கொண்ட காரியம் வெற்றியுண்டாவதாகவென்று கூறித் தொழுது நாம் விடுக்க, அவர் நமக்கு வருவேமென்று உரைத்த காலம், பெருகியகாலத்து நீர் நிறைந்த ஆற்றிடைக்குறையிலே அவர் தம்மை மகிழும் பரத்தையரைக்கூடி, காமனுக்குநிகழ்த்துகின்ற விழாவிடத்தே அவருடனேவிளையாடும் இவ்விளவேனிற்காலமல்லவோ? எ - று.
1. ''கமழ்தா தூதும், வண்ணவன் டிமிர்குரல் பண்ணைபோன் றனவே'' பரி. 14: 34. 2. ''தண்ணருவி நறுமுல்லை'' கலி. 32 : 16. 3. ''உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள், விறலிழை யவரோடு விளையாடு வான்மன்னோ'' கலி. 30 : 13 - 4. 4. (அ) 'சிலைவலான்' கலி. 143 : 34. (ஆ) ''திருமலி கருப்பு வென்றிச் சிலையினா லுலக மெல்லாம், பொருதுசெங் கோன டாத்திப் புகழ் விளையேக வீரன்'' 5. (அ) ''வலனாக...........றுரைத்ததை'' என்பது காலீற்று வினையெச்சம் பிற வினைகொண்டு முடிந்ததற்கு மேற்கோள்; தொல். வினை. சூ. 35. நச். இ - வி. சூ. 247. (ஆ) ''வலனாக.............விடுத்தக்கால்'' என்பது காலீறு இறந்த காலம்பற்றி வருதற்கு மேற்கோள்; தொல். வினை. சூ. 32. சே. சூ. 31. கல். சூ. 32 : நச். இ - வி. சூ. 246.
|