நனி (1) யெள்ளுங் குயினோக்கி யினைபுகு நெஞ்சத்தாற் (2) றுறந்துள்ளா ரவரெனத் துனிகொள்ள லெல்லாநீ எ - து: ஏடீ, நீ உள்ளம் மடித்திருத்தலில்லாதவன் செல்வம் பெருகுமாறு போல மரங்கள் பூப் பெருக்க, அங்ஙனம் முயன்றுபெற்ற செல்வத்தைத் தான் வருந்தாமற் படிபெற்று உண்பாரது நுகர்ச்சிபோல அம்மரங்களிற் பல கொம்பு களிலேதேனையுண்டு மிஞிறுகள் ஆரவாரிப்ப, கரியநிறத்தையுடையவண் மேனி போலத் தளிரை ஈன, அந்நிறத்திற் பரந்த சுணங்குபோல அந்தத் தளிரின்மேலே தாது விழ, அந்த மலர்பரந்த சோலையை அணுகிப் பளிங்கு போலும் நீர்களை யுடையவாகிய குளங்கள் வற்றாது நிற்பப், பூப்பரந்த துறைகளையணுகி நுண் மணலைக் கோலஞ்செய்து அறுதியையுடைய நீர் ஒழுக இவற்றின்மேலே தான் மொழிக்குத் தோற்றிருந்த, பகையாற்பிரிந்திருந்தாரை மிக இகழுங் குயிலைப் பார்த்து வருந்திக் கெடுகின்ற நெஞ்சத்தோடே அவர் நம்மைத் துறந்து இனி நினையாரென்று கருதி வெறுப்புக்கொள்ளாதே; கொள்; எ - று. இது தரவு.
விஷ்ணு. 5. (ஈ) ''சுடர்மணி தெளித்ததன்ன, மென்புனற்றடம்''உத்தரகோச.நளசக்கர. 7. (உ) ''எறிக்கும் படிகத் திரடெளித்தா லெனநின் றிலங்கித் தன்பெயரைக், குறிக்குந் தடந்தீம் புனலாடி'' (ஊ) ''ஈர்ந்தநுண் பளிங்கெனத் தெளிந்த, வந்தணீர்'' (எ) ''மணி தெளித்தனைய மாதீர்த்தக் குளம்''சீகாழி. பிரமபுர. 22; சந்திரன். 7; சேடனுங். 25. 1. ''எள்ளுங் குயிலையு மவரையும் புலவாதி'' கலி. 33 : 27. 2. (அ) ''துறந்துள்ளாரவரெனத் துனிகொள்ளலெல்லாநீ'' என்பது விளியேற்கும் என்று எடுத்தோதாத ஈற்றுள் ஆகாரஈறு ஏடி என்று விளியேற்று வருதற்கு மேற்கோள். தொல். விளி. சூ. 12. நச். (ஆ) ''துனிகொள்ள லெல்லாநீ'' என்பதனை, ''எல்லாள்'' என்பது ஈறு கெட்டு ''எல்லா'' எனநின்று விளியேற்றற்கு மேற்கோள் காட்டினர்; மயிலை. வி. இரா. நன். பெயரியல். சூ. 51. (இ) ''ளகாரவீற் றுயர்பெயர் ஈறழிந்துவிளியேற்குமென்னும் நன்னூற்கருத்தை மாற்றி, தாம் செய்த சூத்திரத்தினுரையில் ''துறந்துள்ளா ரவரெனத் துனி கொள்ள லெல்லாநீயென ஈறழிந்தும் விளியேற்கும் என்பாரும் உளராலோவெனின், அது படர்க்கைப் பெயராகாது தோழி முன்னிலைப் பெயராயே தோழீ என்னும் பொருட்டாய் நிற்பதொன்றாகலின் ஈண்டைக்கு ஏலாதென்க'' என்பர். இ - வி. நூலாசிரியர். இ - வி. சூ. 210.
|