| என்னவாங்கு | 21. | உள்ளுதொறுடையுநின் னுயவுநோய்க் குயிர்ப்பாகி யெள்ளறு காதல ரியைதந்தார் புள்ளியற் காமர் கடுந்திண்டேர்ப் பொருப்பன் வாய்மை யன்ன வைகலொடு புணர்ந்தே. |
இது வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி இக்காலம் அல்லவோ அவர் வருதுமெனச் சொன்ன காலமென வன்புறையெதிரழிந்தாளை நீ துனி கொள்ளல் அவர் வந்தாரெனத் தலைவன் வரவுணர்ந்து தோழி ஆற்றுவித்தது. இதன் பொருள். (1) மடியிலான் செல்வம்போன்மரனந்த வச்செல்வம் | 1படியுண்பார் நுகர்ச்சிபோற்பல்சினை மிஞிறார்ப்ப | (2) மாயவண் மேனிபோற் றளிரீனவம்மேனித் | தாய சுணங்குபோற் றளிர்மிசைத்தாதுக | (3) மலர்தாய பொழினண்ணி (4) 2மணிநீர கயநிற்ப | வலர்தாய துறைநண்ணி யயிர்வரித்தறல்வார |
1. (அ) சீர்வகையான்வருங்கலியடி தளைவிரவினுங் கடியப்படா வென்பதற்கு ''மடியிலான் செல்வம்போன் மரனந்த வச்செல்வம்'' என்பது மேற்கோள். தொல். செய். சூ. 61. நச். (ஆ) ''அசைவி னோன்றா ணசைவள னேத்தி'' (இ) ''நின், றாள்படு செல்வங் காண்டொறு மருள'' புறம். 148:2. 161: 14-5. (ஈ) ''ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா, வூக்க முடையா னுழை'' (உ) ''மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான், றாஅய தெல்லா மொருங்கு'' (ஊ) ''முயற்சி திருவினையாக்கும்'' (எ) ''மடியிலான், றாளுளா டாமரையி னாள்'' குறள். 594, 610, 616, 617. (ஏ) ''ஊக்க வேந்த னாக்கம்போல, வீக்கங்கொண்டு'' பெருங். ( 3 ) 5: 20-21. (ஐ) ''ஆக்கமிங் கொருவரா லணுக வேண்டுமே, லூக்கமுண் டாவரே லுறுவ ரன்னது, நீக்கமில் கொள்கையினிற்ப ரேயெனின், மேக்குறு பெருந்திரு விரைவின் மேவுமால்'' கந்த............... (ஒ) ''முயற்சி, யுலைவறப் புரியா வொருவனுக் கெங்ஙனுற்றிடுஞ் செல்வம் குசேலோ. மேல்கடல். 147. 2. கலி. 29: 7-8 -ஆம் அடிகளையும் அவற்றின் குறிப்பையும் பார்க்க. 3. ''அணிமலர்ப் பூம்பொழி லதனுள், வண்ண மாச்சுனை மாநீர் மணி தெளித்தனையது'' சீவக. 1566. 4. (அ) ''மணிநீரும்'' குறள். 742. (ஆ) ''மணிதெளித்தனைய நீர்'' நைட. புனல். 1. (இ) ''மணிதெளித் தனைய வான்புனற் றடத்தின்'' காசி. (பிரதிபேதம்) 1 படியுண்பா னுகர்ச்சி, 2 மணிநீர்க் கயம்.
|