190

பண்ணிய மாவினர் புகுதந்தார்
(1) கண்ணுறு பூசல் கை 1 களைந்தாங்கே

எ - து: நின் 2 நெஞ்சினோயை நீகூறிச் சுழலாதேகொள். ஏடீ! நாம் வருவரென எண்ணியிருந்தநாளெல்லை கடவாமல், கண்உறுகின்றவருத்தத்தைக் கை நீக்கினாற்போலக் காதலர் சமைத்த மாவினையுடையராய் வந்தார்காண் 3 எ-று.

இது சுரிதகம்.

இதனால், தலைவிக்குப் புணர்வாகிய உவகை பிறந்தது.

இஃது ஏழடித்தரவும் நான்கடித்தாழிசையும் தனிச்சொல்லும் நான்கடிச்சுரிதகமும் பெற்று வந்த ஒத்தாழிசைக்கலிப்பா. (33)

(35).மடியிலான் செல்வம்போன் மரனந்த வச்செல்வம்
மடியுண்பார் நுகர்ச்சிபோற் பல்சினை மிஞிறார்ப்ப
மாயவண் மேனிபோற் றளிரீன வம்மேனித்
தாய சுணங்குபோற் றளிர்மிசைத் தாதுக
மலர்தாய பொழினண்ணி மணிநீர கயநிற்ப
வலர்தாய துறைநண்ணி யயிர்வரித் தறல்வார
நனியெள்ளுங் குயினோக்கி யினைபுகு நெஞ்சத்தாற்
றுறந்துள்ளா ரவரெனத் துனிகொள்ள லெல்லாநீ;
9.வண்ணவன் டிமிர்ந்தானா வையைவா ருயரெக்கர்த்
தண்ணருவி நறுமுல்லைத் தாதுண்ணும் பொழுதன்றோ
கண்ணிலா நீர்மல்கக் கவவிநாம் விடுத்தக்கா
லொண்ணுதா னமக்கவர் வருதுமென் றுரைத்ததை;
13.மல்கிய துருத்தியுண் மகிழ்துணைப் புணர்ந்தவர்
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ
வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்கா
லொளியிழாய் நமக்கவர் வருதுமென் றுரைத்ததை;
17.நிலனாவிற்றிரிதரூஉ நீண்மாடக் கூடலார்
புலனாவிற் பிறந்தசொற் புதிதுண்ணும் பொழுதன்றோ
பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்காற்
சுடரிழாய் நமக்கவர் வருதுமென் றுரைத்ததை;

1. (அ) ''கண்பனி துடையினித் தோழி நீயே''. (ஆ) ''கண்ணுறு பொழுதிற் கைபோ லெய்தி, நும்மோர்க்கு நீதுணை யாகலு முளையே'' (இ) ''பனித்தகண்டுடைத்து'' விநாயக. சிந்தாமணி. 202.

(பிரதிபேதம்) 1 கலந்தாங்கே, 2 நெஞ்சினோய்கூறிநீ, 3 என உவகையாற்கூறினாள்.