16 | தளையவிழ்பூஞ் சினைச் (1) சுரும் பியாழ்போல விசைப்பவுங் கொளைதளரா தவர்தீமை மறைப்பென்மன் மறைப்பவுங் (2) கிளையழிய வாழ்பவ னாக்கம்போற் புல்லென்று வளையானா நெகிழ்போடுந் தோளாயி னெவன்செய்கோ |
எ - து; முறுக்கு அவிழ்ந்த பூக்களையுடைய சினையிடத்தே சுரும்பினம் யாழ்போலே ஒலியாநிற்கவும் கொண்டகோட்பாட்டினைக்குலையாதவருடைய தீமையை மறையாநிற்பேன்; அதனாற் பெற்றதென்? மறைப்பினும் சுற்றங்கெட வாழ்பவன் ஆக்கம் பொலிவழியுமாறுபோலப் பொலிவழிந்து தோள்கள் வளைகிடத்தலமையாவாய் நெகிழ்ந்து கழலுமாயின் யான் அதற்கு என் செய்வேன்? எ - று. கண் பனிவாரும், தோள் வளையோடுமெனச் சினைவினை முதன்மேல் நின்றது. இவை மூன்றும் தாழிசை. எனவாங்கு எ - து: என்றுசொல்லி; எ - று. ஆங்கு, அசை. இது தனிச்சொல்.
21 | நின்னுண்ணோய் நீயுரைத் தலமர லெல்லாநா மெண்ணிய நாள்வரை யிறவாது காதலர் |
(இ) "கோல்வளை யரசன் கீழ்வாழ் குடியென நடுங்க மாட்டி" உத்தரகோச. பார்ப்பதி. 34. என்பவையும், (ஈ) "ஆள்பவர் கலக்குற வலைபெற்ற நாடுபோல்" கலி. 5 : 12. என்பதும் (உ) அதன் குறிப்பிலும் (ஊ) இந்நூற்பக்கம், 145 : 2 - ஆம் குறிப்பிலும் (எ) 146 : 1 - ஆம் குறிப்பிலும் இவ்விடத்திற்குப் பொருந்துவனவும் இங்கே அறிதற்பாலன. 1. (அ) "வாடிநரம் பிசைப்ப போல்.................. சுரும்பார்ப்ப" கலி. 36 : 3. (ஆ) "சுரும்பு நரம் பெனவார்ப்ப" வளையாபதி. 2. "தன்னினந் தளரா வண்ணந் தாங்குத றரும மென்றே, நன்னகர் பலவும் வாழ நயந்துதன் னிடத்தில் வாழ்வு, மன்னிய செல்வர் தம்பால் வளமிக் கொடுத்துத் தன்பா, லெந்நகர் வளமுங் காட்டி யிருப்பதந் நகர நாளும்" விநாயக. திருநகர. 3. என்பதும் "சிறியவன் செல்வம்போற் சேர்ந்தார்க்கு நிழலின்றி" (கலி. 10 : 2) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.
|