188

"புல்லு மரனு மோரறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே."
(1) இதனுட் (2) பிற அறிவும் உளவென்று கூறினார்; அதனாற் பாவத்திற்கு அஞ்சி மரம் கவின்வாடிற்றென்றார்.

12 பொறைதளர் கொம்பின்மேற் (3) சிதரின மிறைகொள
நிறை (4) தளரா தவர்தீமை மறைப்பென்மன் 1மறைப்பவு
(5) முறைதளர்ந்த மன்னவன்கீழ்க் குடிபோலக் கலங்குபு
பொறைதளர்பு பனிவாருங் கண்ணாயி னெவன்செய்கோ

எ - து: பூவின்பாரத்தாற் றளர்ந்த கொம்பின்மேலே வண்டினுடைய திரள் தங்குதல்கொள்ளாநிற்கவும் நிறையென்னுங் குணம் தளராதவருடைய கொடுமையை யான் மறையாநிற்பேன்; அதனாற் பெற்றதென்? மறைப்பினும் நாடாளும் முறைமை தளர்ந்த அரசன்கீழ் இருந்த குடிமக்களைப்போலக் கலங்காநின்று கண்கள் பொறுத்தலாற்றாமல் நீர் ஒழுகுமாயின் யான் அதற்கு என்செய்வேன்; எ -று.


(இ) "கனையெரி பொத்தி" சிலப். 14 : 122; மணி. 2 : 42. (ஈ) "புகையழல்பொத்தி, நெஞ்சஞ் சுடுதலின்" சிலப். 23 : 48 - 9 (உ) "முளியெரிபொத்தி" (ஊ) "புகையெரி பொத்தி" (எ) "இகலெரி பொத்தி" மணி. 16 : 26, 19 : 27, 20 : 78. (ஏ) 'கனல்பொத்தி' கம்ப. இரணியன். 84. என்பவற்றாலுணர்க.

1. தொல். மரபு. சூ. 28. இதற்கு இவ்வுரைகாரர் அங்கெழுதியிருக்குமுரை ஆராய்தற் பாலது.

2. மரமுயி ரில்லை யென்பார், பித்தல ராயிற் பேய்க ளென்றலாற் பேசலாமோ" சீவக. 1907.

3. (அ) "சிதர்சிதர்ந் துகுத்த செவ்விவேனில்" (ஆ) "மலருண் வேட்கையிற் சிதர்சிதர்ந் துகுப்ப" அகம். 277 : 18்; 317 : 7. (இ) "சிதர்தொழிற் றும்பியொடு மதர்வண்டு மருட்ட" பெருங். (1) 33 : 28. என்பவற்றால், சிதறுதல் அல்லது கிளறுதலாகிய சிதர்தற்றொழில் பற்றி வண்டு சிதரெனப்பட்ட தென்று தெரிகிறது. (ஈ) "தொரீத்து வண்டி மிருங்கோதை" சீவக. 1986. என்பதனுரையும் நோக்குக.

4. தளர்தல் - குலைதல், கலி. 34 : 17; தப்புதல், சீவக. 1190.

5. (அ) "மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள், விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற், கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடிகயத் தடமுங் காவுந், தண்குளிர் கொள்ளுமேனுந் தான்மிக வெதும்பு மன்றே" (ஆ) "தீயினம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியுமாயிற், போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மையாலே, வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப்புல்வாய், மாயினம் படர்ந்த தெல்லாம் வையகம் படருமன்றே" சூளா. மந்திர. 26 - 27.