8 விரி (1) காஞ்சித் தாதாடி யிருங்குயில் (2) விளிப்பவும் பிரிவஞ்சா தவர்தீமை மறைப்பென்மன் மறைப்பவுங் (3) கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி (4) யெரிபொத்தி யென்னெஞ்சஞ் சுடுமாயி னெவன்செய்கோ எ - து: அலர்ந்த காஞ்சிப்பூவிற் றாதை அளைந்து கரிய குயில்கள் கூவா நிற்கவும் இக்காலத்தே பிரிந்துறைதற்கு அஞ்சாதவருடைய கொடுமையையான் மறையாநிற்பேன்; அதனாற் பெற்றதென்? மறைப்பினும் சான்று பொய்த்தவன் வந்து தன்கீழே இருக்கப்பட்ட மரம்போல யான் அழகு கெடும்படி என்னெஞ்சு காமத்தீக்கொளுந்தி என்னைச்சுடுமாயின் யான் அதற்கு என்செய்வேன்? எ - று.
1. (அ) "புன் காஞ்சித் தாதுதன் புறம்புதைய........................குயிறழுவ" (ஆ) "குறுத்தாட் குயிற்சேவல் கொழுங்காஞ்சித் தாதாடி" சீவக. 648, 650. (இ) "குயிற்குழாங்குடை காஞ்சியின் கோமளத் தாது" காஞ்சி. திருக்கண்.21. 2. (அ) "விளித்தாலுங் குயிலாயின்" (கலி. 28 : 8)என்பதனையும் (ஆ) "தண்காஞ்சித் தாதாடித் தன்னிறங்கரந்ததனைக்கண்டானா மடப்பெடை கிளியெனப்போய்க்கையகல, நுண்டூவி யிளஞ்சேவனோக்கோடு விளிபயிற்றித், தன்சிறகாற் பெடைதழுவத் தலைவந்த திளவேனில்" (சீவக. 649) என்பதனையும் நோக்கி விளித்தலென்பதற்கு அழைத்தலென்று பொருள் கூறலுமாம். (இ) "கூடிப் புணர்ந்தீர் பிரியன் மினீடிப், பிரிந்தீர் புணர்தம்மி னென்பன போல, வரும்பவிழ் பூஞ்சினைதோறு மிருங்குயி, லானா தகவும் பொழுதினான்" கலி. 92 : 61 - 64. என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 3. (அ) "அறகரி பொய்த்த லான்றோர்க் கில்லை" குறுந். 184. (ஆ) "சான்றவர் கையுண்டுங் கூறுவர் மெய்" பழ. 241. (இ) "கொடுங்கரி போ வானாச்சாம்" சிறுபஞ்ச. 10. (ஈ) "கைக்கரி யன்னவன் பகழி கண்டகர், மெய்க்குலம் வேரொடுந் துணித்து வீழ்த்தின, மைக்கரு மனத்தொரு வஞ்சன் மாண்பிலன், பொய்க்கரி கூறிய கொடுஞ்சொல் போன்றவே" கம்ப.கரன்வதை.124. (உ) "புலந்தெரி பொய்க்கரி புகலும் புன்கணார், குலங்களி னவிந்தனர் குரங்கி னாலென்றார்"கம்ப. கிங்கரர் வதை. 58. (ஊ) "மொய்த்த மீன்குல முதலற முருங்கின மொழியிற், பொய்த்த சான்றவன் குலமெனப் பொருகணை யெரிப்ப" கம்ப. வருணனை வழிவேண்டு. 25. (எ) "வஞ்சவினை செய்து நெடு மன்றில்வள னுண்டுகரி பொய்க்கு மறமார், நெஞ்சமுடை யோர்கள் குல மொத்தன ரரக்கர்" கம்ப. மூலபல. 145. 4. (அ) "எரிபொத்துதலென்னும்வழக்கை", "பொத்திற்றுத்தீ" கலி. 145 : 58. (ஆ) "கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து" புறம். 247 :
|