184

இதனால், தலைவிக்குப் புணர்வாகிய உவகை தோன்றிற்று.

இதனுள், முச்சீரடியும் நாற்சீரடியுமாய் நின்றவாறுணர்தற்கு 'நகுவன' 'புகுவது' 'தொகுபுடன்' 'உகுவன' 'இகுபறல்' எனத் தொடைச்சுவை கொடுத்துக் கூறவே,அவற்றிற்கு முன்னின்றன நொந்து என ஒழியசையாகியும் நைந்துள்ளி, எள்ளி, கையில், என்கண்போலென வழியசை புணர`்ந்தும் வந்த சொற் சீரடிகளும் 'தொகுபுடனாடுவ போலு மயில்' என நாற்சீரடியுமாய் வந்தன.

இது தரவும் தரவின்விகற்பமாகிய தாழிசையும் ஏனையுறுப்புக்களும் பெற்று வந்த கொச்சகக் கலிப்பா. தரவின் விகற்பமாகிய தாழிசையையும் தரவின்பாற்படுத்து இதனை இடைநிலைப்பாட்டின்றிவந்த தரவிணைக்கொச்சகக் கலிப்பா என்பாரும் உளர்.

"இயற்சீர் வெள்ளடி யாசிரிய மருங்கி, னிலைக்குரி மரபினிற்கவும் பெறுமே" என்னும் (1) சூத்திரத்துள் இங்ஙனம் வரும் வெள்ளைக் கொச்சகத்துள் ஆசிரியவடி சிறிதுவருமென்றலின், 'பொரியுரு வுறழப் புன்குபூ வுதிர' என ஆசிரியவடி வந்தது. ( 32 )

(34).மன்னுயி ரேமுற மலர்ஞாலம் புரவீன்று
பன்னீராற் பாய்புனல் பரந்தூட்டி யிறந்தபிற்
சின்னீரா னறல்வார 1வகல்யாறு கவின்பெற
முன்னொன்று தமக்காற்றி முயன்றவ ரிறுதிக்கட்
பின்னொன்று பெயர்த்தாற்றும் பீடுடை யாளர்போற்
பன்மலர் சினையுகச் சுரும்பிமிர்ந்து வண்டார்ப்ப
வின்னம ரிளவேனி லிறுத்தந்த பொழுதினான்;
8விரிகாஞ்சித் தாதாடி யிருங்குயில் விளிப்பவும்
பிரிவஞ்சா தவர்தீமை மறைப்பென்மன் மறைப்பவுங்
கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி
யெரிபொத்தி யென்னெஞ்சஞ் சுடுமாயி னெவன்செய்கோ;
12பொறைதளர் கொம்பின்மேற் சிதரின மிறைகொள
நிறைதளரா தவர்தீமை மறைப்பென்மன் மறைப்பவு
முறைதளர்ந்த மன்னவன்கீழ்க் குடிபோலக் கலங்குபு
பொறைதளர்பு பனிவாருங் கண்ணாயி னெவன்செய்கோ;
16தளையவிழ்பூஞ் சினைச்சுரும் பியாழ்போல விசைப்பவுங்
கொளைதளரா தவர்தீமை மறைப்பென்மன் மறைப்பவுங்
கிளையழிய வாழ்பவ னாக்கம்போற் புல்லென்று
வளையானா நெகிழ்போடுந் தோளாயி னெவன்செய்கோ;

1. தொல், செய். 62.