185

எனவாங்கு;
21 நின்னுண்ணோய் நீயுரைத் தலமர லெல்லாநா
மெண்ணிய நாள்வரை யிறவாது காதலர்
பண்ணிய மாவினர் புகுதந்தார்
கண்ணுறு பூசல் கைகளைந் தாங்கே.

இது பருவங்கண்டு வன்புறையெதிரழிந்து ஆற்றாளாய தலைவிக்குத் தோழி அவன் வரவுணர்ந்து கழியுவகையாற் கூறியது.

இதன் பொருள்.

(1) மன்னுயி ரேமுற மலர் ஞாலம் புரவீன்று
பன்னீராற் (2) 1பாய்புனல் பரந்தூட்டி (3) யிறந்தபிற்
(4) சின்னீரா னறல்வார 2வகல்யாறு கவின்பெற


1. (அ) "சுரந்த காவிரி மரங்கொன் மலிநீர், மன்பதை புரக்கு நன்னாட்டுப் பொருநன்" புறம். 68 : 9 - 10; (ஆ) "சரயு வென்பது தாய்முலை யன்னதிவ், வுரவுநீர்நிலத் தோங்கு முயிர்க்கெல்லாம்" கம்ப. பால. ஆற்று. 12.

2. (அ) பாய்தலென்பது பரத்தலாகிய குறிப்புணர்த்து மென்பதற்குப் 'பாய்புனல்' என்பது மேற்கோள்," தொல். உரி. சூ. 65. சே; தெய். (ஆ) பெயரெச்சவீற்றும்மை இடைச்சொல்லென்று கொள்ளப்படுமென்றும் பாயும் புனலென்பது பாய்புனலெனத் தொக்குழி வேற்றுமைப் பொருட்கண் உருபு பெயர்நிற்பத் தொக்கவாறு போல வினை நிற்ப உருபுதொகுதலாற் பாயுமென்பது வினையு முருபுமாகிய இருநிலைமைத்தென்று கொள்கவென்றும் கூறுவர், தெய்; தொல். இடை. சூ. 7. 'எச்சஞ்'.

3. (அ) "அற்றக் கடைந்து மகல்யா றகழ்ந்தக்கா, றெற்றெனத் தெண்ணீர் படும்" (ஆ) "உறுபுனறந்துல கூட்டி யறுமிடத்துங், கல்லூற் றுழியூறு மாறே போல்" நாலடி. 150; 185. (இ) "பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போன், மள்ளர் வேனிலின் மணற்றிடர் பிசைந்துகை வருட, வெள்ள நீரிரு மருங்குகால் வழிமிதந் தேறிப், பள்ள நீள்வயற் பருமடை யுடைப்பது பாலி" பெரிய. திருக்குறிப்பு. 22. (ஈ) "ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா, றூற்றுப் பெருக்கா லுலகூட்டும்" நல்வழி. 9. (உ) "ஆறு பெருக்கற் றருந் திடர்தான் பட்டாலு,
மூறலமை யாதோ வுலகாற்ற" தனிப்பாடல்.

4. (அ) "அயிர்வரித்தறல் வார்ந்துமெய்யடியவ ரகம்போற், செயிர றத்தவத் தெளிந்துசின் னீர்புடை யொழுக" திருவானைக்காப். ஆரஞ்சாத்து 18. (ஆ) சின்னீர்: இந்நூற்பக்கம். 73 : 4 - ஆம் குறிப்புப்பார்க்க.

(பிரதிபேதம்) 1 கால்புனல், 2 அகன்யாறு.