183

(1) நம்மை இம்மைப்பிறப்பினுள் துறப்பார்கொல்லென வாளாதே ஐயஞ் செய்தலின், இஃது ஐயஞ்செய்தல்.

அரோ, அசை.

இவை தரவின் விகற்பமாகிய தாழிசை.

எனவாங்கு, 1ஆங்கசை.

இது தனிச்சொல்.

27புரிந்துநீ எள்ளுங் குயிலையு மவரையும் புலவாதி
நீலித 2ழுண்கணாய் 3நெறிகூந்தல் பிணிவிட
(2) நாள்வரை நிறுத்துத்தாஞ் சொல்லிய பொய்யன்றி
(3) மாலைதாழ் வியன் மார்பர் துனைதந்தார்
(4) காலுறுழ் கடுந்திண்டேர் கடவினர் விரைந்தே

எ - து: அதுகேட்ட தோழி, என்று, மனம் வேறுபட்டு நீலப்பூப்போலும் மையுண்கண்ணினையுடையாய்! நீ நம்மை இகழுங் குயிலையும் தலைவரையும் புலவாதேகொள்; தாம்வரும் நாளெல்லையை நம்நெஞ்சிலே நிறுத்திச்சொல்லிய கூற்றுக்கள் பொய்யல்லவாக மாலை தங்கின அகற்சியையுடைய மார்பினை யுடையார் காற்றையொக்குங் கடிய திண்ணிய தேரை விரைந்து செலுத்தி நமது 4நெறித்த (5) கூந்தலைப் பின்னின பின்னல் விடும்படி 5நாம் விரைதலை நமக்குத் தந்தார்காண் 6என்றாள்; எ - று.

(6) நீலம், கடைக்குறைந்தது.

இது சுரிதகம்.


1. "தூதவர்.............அரோ" என்பதை ஐயஞ் செய்தல் என்னும் மெய்ப்பாட்டிற்கு மேற்கோள்காட்டி, (தொல். மெய்ப். சூ. 22;) இக்குறிப்பையும் எழுதினர், பேராசிரியர்; இ - வி. நூலாசிரியரும் (இ - வி. சூ. 580.) இப்பகுதியை ஐயஞ்செய்தலுக்கு மேற்கோள் காட்டினர்.

2. இவ்வடி கலி. 31 - இல். 23-ஆவது அடியாகவும் வந்துள்ளது.

3. "ஏமுறு கடுந் திண்டேர் கடவி, நாமமர் காதலர் துணை தந்தார் விரைந்தே" என்பது, கலி. 27:25-26.

4. "வளியி னிகன்மிகுந் தேரும்" கலி. 50 : 15.

5. (அ) "சிறுகுறுந் கூனுங் குறளுஞ் சென்று, பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தா, னறுமலர்க் கூந்த னாளணி பெறுகென" சிலப். 27 : 214 - 6. (ஆ) "தன்னவன் றணந்த காலைப், பூமனும் புனைத லின்றி" சீவக. 1598.

6. "நீலுண் டுகிலிகை கடுப்ப"

(பிரதிபேதம்) 1 அசை, 2 உண்கண்ணாய், 3 செறிகூந்தல், 4 செறிந்தகூந்தலை, 5 தாம், 6 எனஆற்றுவித்தாள்.