நினைந்து அழிவதுபோலே இராநிற்கும்; (1) மயில்கள் நம்மை இகழ்ந்து கால மன்றியும் சேரத் திரண்டு ஆடுவனபோலே இராநிற்கும்; நங் கையில் வளைகள் நாம் காப்பவுங் கழல்வன்போலே இராநிற்கும்; என் கண்போலே அறுதியை யுடைய நீர் இற்று ஒழுகும் இளவேனிற்காலத்தும் தலைவர் வாரார்; ஆதலால் இந்நோய் இனி இந்நிலையினும் மிகுவதுபோல இராநிற்கும்; எ - று. (22). | (2) நரம்பின் றீங்குர னிறுக்குங் குழல்போ (3) லிரங்கிசை (4) மிஞிறொடு (5) தும்பிதா தூதத் (6) தூதவர் 1விடுதரார் துறப்பார்கொ (7) னோதக விருங்குயி லாலு மரோ |
எ - து: 2 நரம்பினது இனிய இசையைத் தானத்திலே நிறுத்தும் வங்கியம் போல, ஒலிக்கும் ஓசையையுடைய (8) மிஞிறோடே தும்பி தாதை ஊதாநிற்க, நமக்கு 3நோவுதகும்படியாகக் கரிய குயில்கள் கூவாநிற்கும்; இவ்வளவிலும் தலைவர் ஒருதூதாயினும் வரவிடாராய் நம்மைத் துறப்பாரோ துறவாரோ கூறாய்; 4 எ - று.
1. "களிமயில் குனித் திடக்கால மன்றியும்" நைடதம். கான்புகு. 1. 2. "குழல்வழி நின்ற தியாழே" என்பது இங்கு அறியத்தக்கது. 3. நச்சினார்க்கினியர் சுரும்பு, வண்டு, தேன், மிஞிறு இந்நான்கையும் தும்பியதுகிளையென்றுகூறி "இரங்கிசை மிஞிறொடு தும்பிதா தூத" என்பதை அதற்கு மேற்கோள் காட்டுவர்; சீவக. 892, 893. 4. "மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்" புறம். 308 : 2. 5. (அ) "தும்பி.........................தீங்குழலாம்பலி னினிய விமிரும்" ஐங். 215. (ஆ) "குழலிசைத் தும்பி" அகம். 245. (இ) "இருந்தும்பி யின்குழலூதும் பொழுது" கார். 15. (ஈ) "குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட" (உ) "கொம்பர்த்தும்பி குழலிசை காட்ட" மணி. (4) 3. (19) 57. (ஊ) "இருங்கட் டும்பி குழலாக" சீவக. 2691. (எ)"சோலைத் தும்பி மென்குழ லாக" கம்ப. பூக்கொய். 34. (ஏ) "நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத்தும்பி" குறுந். 239. (ஐ) "நறுந்தா தூதுந் தும்பி" அகம். 108. 6. "தூதவர்..............அரோ" என்பது அரோ அசையாய் வருதற்கு மேற்கோள்; நன். இடை. சூ. 22 மயிலை. 7. 'அரோ' என்பது அசை நிலையாய் வருதற்கு (அ) "நோதக விருங்குயி லாலுமரோ" என்பது தொல். இடை. சூ. 31. சேனா. நச். சூ. 30. தெய். நன். இடை. சூ. 22, வி. இரா; இ - வி. சூ. 277. மேற்கோள். (ஆ) புறனடை விதியான் நோவுதகவென்பது நோதகவாயிற்றென்பர். அடியார்க்கு நல்லார்; சிலப். (16) 17. 8. மிஞிறு, தேனீயென்பர், புறநானூற் றுரையாசிரியர்; புறம். 22 : 6. (பிரதிபேதம்) 1 விடாராய்., 2 நரம்பினினிய, 3 நோவுதருபடியாக, 4 என்றாள்.
|