181

(16). (1) நொந்து, நகுவனபோ னந்தின கொம்பு; 1 நைந்துள்ளி
(2) யுகுவது போலுமென் னெஞ்சு; எள்ளித்
தொகுபுட னாடுவ போலு மயில்; கையி
லுகுவன போலும் வளை; (3) என்கண்போ
லிகுபறல் வாரும் பருவத்தும் வாரார்
மிகுவது போலுமிந் நோய்

எ - து: பிரிந்த மகளிரை நகுதற்கு நங்காலம் வருகின்ற தில்லையே யென்றுநொந்திருந்து அதுவந்தபின்னர் நம்வருத்தங்கண்டுசிரிப்பனபோலக் கொம்புகள் பூ மிக்கன; அதனைக் கண்டு என்னெஞ்சம் வருந்தித் தலைவரை


1. "நொந்து, நகுவனபோ னந்தின கொம்பு; நைந்துள்ளி, யுகுவது போலுமென் னெஞ்சு; எள்ளித், தொகுபுட னாடுவ போலு மயில்; கையி, லுகுவன போலும் வளை. இவை முச்சீரடியான் வந்தனவு நாற்சீரடியான் வந்தனவுமாய் நின்றவாறுணர்தற்கு 'நகுவன', 'உகுவது'. 'தொகுபுடன்', 'உகுவன' எனத் தொடைச்சுவடு படுத்துக் கூறவே அவற்றின் முன்னின்ற சொற்கள் வழியசை புணர்ந்த சொற் சீரடியாயவாறு காண்க. இவை யிடைநிலைப் பாட்டன்றிக் கொச்சகமாகலின் வரையறையின்றி, 'தொகுபுட னாடுவ போலு மயில' என நாற்சீரடியானும் வந்தது. இவை மேலெண்ணவும் படும். இவை கலிக்கண் வருங்கால் ஒத்தாழிசையினும் உறழ்கலியினும் முடுகியல் வாராமையும், அவற்றுட்சொற்சீரடி வருங்காற் றனிச்சொல்லாயல்லது வாராமையுங் கொள்க." தொல். செய் சூ. 123. நச்.

2. "'உருவதுபோலு மென்னெஞ்சு; எள்ளித், தொகுபுடனாடுவது போலு மயில்' என்பது வழியசை புணர்ந்த சொற்சீரடி; என்னை? எள்ளியென நின்ற சீரின் வழித் தொகுபெனவந்த அசை உகுவதுபோலுமென்னும் தொடையொடு பொருந்தி, உகுவதுபோலு மென்னெஞ் செள்ளித், தொகுபுடன்' எனப் புணர்ந்துநின்றாற் போல்வதோர் சுவைமை செய்து நின்றமையின் கொச்சகம் இடை நிலைப்பாட்டெனப் படாமையின் '(தொகுபுடன்) ஆடுவது போலு மயில்' என நா[லடி](ற்சீரடி) யாலும் வருவதாயிற்று, வரையறையின்மையின். இங்ஙனம் வந்தமையின் சொற்சீரடி மேல் எண்ணவும் படும். இவை கலிக்கண் வருங்கால் ஒத்தாழிசைக்கண் முடுகியலடிவாராதென்பதூஉம் சொற்சீரடி வருஞான்றுத் தனிச்சொல்லாகியன்றி வாராதென்பதூஉம் உறழ்கலிக்கண்ணும் முடுகியலடி உரித்தன் றென்பதூஉம் கொள்க" தொல். செய்.சூ. 123. பே.

3. "நனியறல் வாரும் பொழுதென வெய்ய, பனியறல் வாருமென் கண்" கலி. 36 : 14 - 5.

(பிரதிபேதம்) 1 இனைந்துள்ளி.