180

(10). (1) எரியுரு வுறழ விலவ மலரப்
(2) பொரியுரு வுறழப் புன்குபூ வுதிரப்
புதுமலர்க் (3) கோங்கம் பொன்னெனத் தாதூழ்ப்பத்
தமியார்ப் புறத்தெறிந் தெள்ளி முனியவந்
தார்ப்பது போலும் 1பொழுதென் னணிநலம்
போர்ப்பது போலும் பசப்பு

எ - து: இவ்விளவேனிற்பொழுது நெருப்பினுருவையொப்ப இலவம் பூப்ப, பொரியின் உருவை யொப்பப் புன்குகள் பூஉதிர, புதிய மலர்களையுடைய கோங்கம் பொன்னென்னும்படி தாதை அலர, நாம் வெறுக்கும்படி வந்து தனித்திருப்பாரை அகத்திடாது புறத்தே தள்ளி இகழ்ந்து இவ்வூர் அலர் தூற்றுங் கொடுமையையொக்கும்; அது கண்டு பசப்பு எனது அழகையுடைய நலத்தை மறைப்பதுபோல இராநின்றது; 2 எ - று.


1. "எரியுருவுறழ "விலவமலர" என்பது (அ) உருவுவமத்தின்கண் உரியவாய்பாடன்றி, பொதுச்சூத்திரத்தான் வருமெனப்பட்ட வாய்பாட்டுள் உறழவென்பது அருகிவந்ததற்கும் (தொல். உவம சூ. 16. பே.)
(ஆ) உருட்டுவண்ணத்திற்கும் (தொல். செய். சூ. 232. பே.) மேற்கோள். (இ) "எரிப்பூ விலவத் தூழ்கழி பன்மலர்" ஐங்குறு. 368. (ஈ) "இலவ மேறிய கலவ மஞ்ஞை, யெரிபுகு மகளி ரேய்க்கும்" ஐங்குறு. 503. (உ) "இலவத், தழலகைந் தன்ன வலங்குசினை யொண்பூ" அகம். 245. (ஊ) "எரிநிறத் திலவம்" சிலப். (5) 214. (எ) "எரிமல ரிலவமும்" மணி. 3. 166. (ஏ) "ஒள்ளெரி யெழுந்த வூழ்படு கொழுமலர், முள்ளரையிலவத்துள்" (ஐ) "எரிமல ரிலவத்து" பெருங். (1) 53 : 177; 54 : 143.

2. (அ) "பொரிப்பூம் புன்கின்" நற். 9. (ஆ) ஐங்குறு. 247. (இ) "புன்கின் பூத்தாழ் வெண்மணல்................செந்நெல் வான்பொரி சிதறியன்ன" (ஈ) "பொரிப்பூம் புன்கொடு" குறுந். 53, 341. (உ) "பொரியெனப் புன்கவி ழகன்றுறை" அகம். 116; 5 - 6. (ஊ) "புன்கு பொரி மலரும் பூந்தண் பொழில்" திணைமொழி. 14. (எ) "பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு” சிலப். 12. ‘செம்பொன்’ (ஏ) “புன்கம் பொரி யணிந்தவே" சீவக. 1649.

3. "நிலவுமரக் குருவாய்ந்து நிற்பனபோற் பூவையெலாங், குலவியகோங் குமிழ்தாதிற் குளித்தொளிருங் கவின்கண்டான்" காஞ்சி. நகரேற்று. 240.

(பிரதிபேதம்) 1 பொழுதெண்ணி, 2 நோக்குமென்க.