துணிகய (1) நிழனோக்கித் துதைபுடன் (2) வண்டார்ப்ப மணிபோல வரும்பூழ்த்து (3) மரமெல்லா மலர்வேயக் (4) காதலர்ப் புணர்ந்தவர் (5) கவவுக்கை நெகிழாது தாதவிழ் வேனிலோ வந்தன்று வாரார்நம் போதெழி லுண்கண் புலம்ப நீத்தவர் எ - து: தான் விளைவித்தலின் (6) வேற்றுநாட்டிற்கு இல்லாத வீறமைந்த உலகிடத்து அகற்சியையுடைய அழகைத் தான் காணவேண்டி யாறு கண்களை விழித்துப் பார்த்தனபோலப் பக்கத்தினின்ற குளங்கள் நீர்நிறைந்து பூக்களால் அழகுபெற, 1 பளிக்குமணியையொக்கும் கண்ணாடிக்குள்ளே பவழம் அழுந் தப்பட்டவை தோன்றினாற்போல அரும்பவிழ்கின்ற (7) முருக்கினுடைய இதழ்கள் அழகையுடைய குளங்களிலே காம்பினின்றுங் கழன்றுவீழ, தெளிந்த குளங்களின் நிழலிலே தம்மையுந் தாம் ஊதும் பூவையுங் கண்டு அவ்விடத்தே நெருங்கி வண்டுகள் சேர ஆரவாரிக்கும்படியாக, கரையினின்ற மரங்களெல்லாம் அரும்புகள் அலர்ந்து பலமணிகளைச் சூடினாற்போலப் பூக்களைச் சூட, எம்மைப்போலாது காதலையுடைய கணவரைக்கூடினவருடைய அகத்திடுதலையுடைய கையை நெகிழாதே தாதையவிழ்க்கும் இளவேனிலோ வந்தது; பூவினது அழகையுடைய மையுண் கண்வருந்த நம்மைக்கைவிட்டவர் வாராராயினார்; எ - று. ஓகாரம் பிரிநிலை. இது தரவு.
தரு நூல்போல்" குறள். 1273. (ஊ) "பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையி, னிளங்கொடி தோன்றுமால்" மணி. 4 : 124 - 5. 1. தும்பி செவியுணர் வொழிந்த நாலுணர் வுடையதென்பதும், வண்டும் தேனீயும் குளவியு முதலாயின அதன் கிளையென்பதும் இங்கே அறியற்பாலன. தொல். மரபு. சூ. 31. பே. 2. வண்டு ஒலித்தலை ஆர்த்தலென்பதும் மரபு: கலி. 30 : 3, 32 : 9, 34 : 6, 36 : 3, 92 : 40, 118 : 11, 131 : 9. 3. (அ) "கோழிண ரெதிரிய மரத்த கவினிக், காடணி கொண்ட காண்டகு பொழுதின்" (ஆ) "மரனேமுற்ற காமர்வேனில்" அகம். 41 : 8 - 9, 317 : 14. 4. காதலற் பிரியாமற் கவவுக்கை ஞெகிழாமல்" சிலப். 1 : 61. 5. "கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்" சிலப். (7) 52 : 5. 6. (அ) "பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங் கேட்டா, லாற்ற விளைவது நாடு" (ஆ) "நாடென்ப நாடா வளத்தன நாடல்ல, நாட வளந்தரு நாடு" குறள். 732, 739. 7. 'பொங்கழன் முருக்கி னொண்குரன் மாந்திச், சிதர் சிதர்ந் துகுத்த செவ்வி வேனில்" அகம். 277. (பிரதிபேதம்) 1 பளிங்குமணியை.
|