16 | நொந்து, நகுவனபோ னந்தின கொம்பு; நைந்துள்ளி யுகுவது போலுமென் னெஞ்சு; எள்ளித் தொகுபுட னாடுவ போலுமயில்; கையி லுகுவன போலும் வளை; என்கண்போ லிகுபறல் வாரும் பருவத்தும் வாரார் மிகுவது போலுமிந் நோய்; | 22 | நரம்பின் றீங்குர னிறுக்குங் குழல்போ லிரங்கிசை மிஞிறொடு தும்பிதா தூதத் தூதவர் விடுதரார் துறப்பார்கொ னோதக விருங்குயி லாலு மரோ; எனவாங்கு; | 27 | புரிந்துநீ எள்ளுங் குயிலையு மவரையும் புலவாதி நீலித ழுண்கணாய் நெறிகூந்தல் பிணிவிட நாள்வரை நிறுத்துத்தாஞ் சொல்லிய பொய்யன்றி மாலைதாழ் வியன்மார்பர் துனை தந்தார் காலுறழ் கடுந்திண்டேர் கடவினர் விரைந்தே. |
இது பருவவரவின்கண் வன்புறையெதிரழிந்து ஆற்றாளாயினாளைத் தோழி தலைவனது வரவுணர்ந்து கூறி ஆற்றுவித்தது. இதன் பொருள். வீறுசான் ஞாலத்து வியலணி காணிய யாறுகண் விழித்தபோற் கயநந்திக் கவின்பெற (1) மணிபுரை வயங்கலுட் டுப்பெறிந் தவைபோலப் பிணிவிடு முருக்கித ழணிகயத் துதிர்ந்துகத்
1. (அ) "பளிங்குசொரி வன்ன பாய்சுனை" குறிஞ்சி. 57. (ஆ) "வீரநீ பாராய் மெல்லென் பளிங்கினால் விளங்குகின்ற, மாரனு மருளச்செய்த மாளிகை மற்றோர் சோதி, சேர்தலுந் தெரிவ வன்றேற் றெரிநில தெரிந்த காட்சி, நீரினா லியன்ற வென்ன நிழலெழு கின்ற நீர்மை" கம்ப. இலங்கைகாண். 40. (இ) "மீன வாவிபோல் வியன்படி கத்தினால் விளங்குந், தான மீ @@@@@@ திருநகர. 33. (ஈ) "சூழ்ந்த பேரொளி துளும்பிய @@@@@@@@@@ வந்துகி லிடை வயிற் றழீஇயினன் பளிங்கு, போழ்ந்தி யற்றிய@@@@@் பூம்புன லிடைப்போய், வீழ்ந்த னன்பெரு வேத்தவை முகிழ்நகை விளைப்ப" பாகவதம். (10) சிசுபாலனைக்கொன்ற, 118. (உ) "மணியிற் றிகழ்
|