(1) அறிவானமைந்தவர் தங்காரியத்தைமுடித்தற்கு அக்காலம்வருந்துணையும் அடங்கியிருக்குமாறுபோலக் காலம்வருந்துணையும் மலர்தலிற் செல்லாத அரும்பு களையுடைய கொம்புகளாலும் வாசிக்க வல்லவரது யாழோசைபோல வண்டுக (2) ளாரவாரிக்குஞ் சிறுதூறுகளாலும் நல்லமகளிருடைய (3) கூத்து, கண்டார்க்கு விருப்பஞ்செய்யுமாறுபோல விருப்பம்வந்த கொம்பாலும் நிலையாமையை உணர்ந்தவருடைய கொடைபோலக் கொத்துகள் அலர்ந்து எல்லார்க்கும் பயன்படும் மரத்தாலும் அன்பாற் கூடினவருடைய புல்லுதலைப் போலப் பின்னுதலுற்ற கொடியாலும், பொழில்கள் அழகைப்பெற வென்க, கொடியொடும் அணிபெறவெனக் கூட்டுக. (4) ஈர், ஈர்க்குமாம். இளவேனில் எம்போல நயந்தார்க்கு நல்லையோவெனமாறி, இளவேனிலே யாங்கள் எம்மை நயந்தார்க்கு நல்லேமாயினாற்போல, நீயும் வெறிகொள அணி பெற எப்பொழுதும் வருவையென்று விரும்பியிருந்தார்க்கு மிகவும் நல்லையோ. நீதான் வந்து அழகிதாகச் செய்தாயென இளவேனிலை நோக்கித் தோழி கூறினாள். அதனை நோக்கிக் கூறியபின்னர்த் தலைவியை நோக்கி,(கூறுகின்றாள்). 14 பசந்தவர் பைதனோய் பகையெனத் தணித்துநம் மின்னுயிர் செய்யு மருந்தாகிப் பின்னிய காதல ரெயிறேய்க்குந் (5) தண்ணருவி நறுமுல்லைப் போதாரக் கொள்ளுங் கமழ்குரற் கென்னுந் (6) தூது வந்தன்றே தோழி துயரறு கிளவியோ டயர்ந்தீகம் விருந்தே
1. (அ) "காலங் கருதி யிருப்பர் கலங்காது, ஞாலங் கருதுபவர்" (ஆ) கொக்கொக்க கூம்பும் பருவத்து" குறள். 485, 490. 2. வண்டார்த்தல்: கலி. 33 : 5 - ஆம் அடியின் குறிப்புப் பார்க்க. 3. "வேறிலை கூத்துப்போல மெய்யுளங் கவர்வதென்றார்" திருவால. 1 : 7. 4. (அ) ஈர்க்கு என்பது மாவிலைமேல் வந்ததற்கு "ஈன்றவள் .....................தளிரொடும்" என்பது மேற்கோள்; தொல். மரபியல். சூ. 87.பே. நச். (ஆ) "ஈர்க்கென்பது: தெங்கு, பனை. மா, வேம்பு. பறப்பனவற்றிற் குரித்து" என்பர், மயிலைநாதர்; நன். பொது. சூ. 37. 5. "தண்ணருவி நறுமுல்லை" கலி. 35 : 10. 6. (அ) 'குடிமையாண்மை'என்னுஞ்சூத்திரத்து 'அன்னபிறவும்' என்பதனான் 'தூதுவந்தது' என்பதனைக்கொள்கவென்றும் தூதென்பது தன்பொருட்குரிய பாலான்முடியாமையின் ஆகுபெயரன்றென்றும் குறிப்புமொழியென்றும் கூறுவர். தெய்; தொல். கிளவி. சூ. 55. (ஆ) "காதலர் தூதொடு வந்த கனவினுக், கியாதுசெய் வேன்கொல் விருந்து" (இ) 'மாலையயர்கம் விருந்து' குறள். 1211: 1268.
|