175

(1)
(2)
(3)
நல்லவர் நுடக்கம்போ 1னயம்வந்த கொம்பொடு
முணர்ந்தவ ரீகைபோ லிணரூழ்த்த மரத்தொடும்
புணர்ந்தவர் 2முயக்கம்போற் புரிவுற்ற கொடியொடு
நயந்தார்க்கோ நல்லைம னிளவேனி லெம்போல

எ - து: தெளிந்த நீராலும் தூய மதியையுடைய நாளாலும் புதல்வனை ஈன்றவளுடைய துத்திபோலே நெய்ப்பினையுண்டாக்கும் மாந்தளிராலும்


தேனினம் யாழ்செயும்" (ஃ) "பாடல் வண் டியாழ்செயும்" சீவக. 1196, 1207. (அஅ) "வண்டினங் காலையாழ் செய்யும்" பு - வெ. பெருந். 13. (ஆஆ) "அரவ வண்டினம் யாழென வார்ப்ப" பெருங். (5) 2 : 18.

1. "சேட்டிகைத் தென்கா றள்ளத் தெண்மதுச் சிதறத் தும்பி, நீட்டிசை முரலச்சாயா நின்றுபூங் கொம்ப ராட, னாட்டியப் புலவ னாட்ட நகை முகம் வெயர்வை சிந்தப், பாட்டிசைத் தாடாநின்ற பாவைமார்போன்ற வன்றே," திருவிளை. தருமிக்கு. 16.

2. (அ) "செல்வத்துப் பயனே யீதல், துய்ப்பே மெனினே தப்புந பலவே" புறம். 189 : 7 - 8. (ஆ) "புன்னுனிமே னீர்போ னிலையாமை யென்றெண்ணி, யின்னினியே செய்க வறவினை - யின்னினியே, நின்றானிருந்தான் கிடந்தான்றன் கேளலறச், சென்றா னெனப்படுத லால்" நாலடி. 29. (இ) "பலதிரண்ட செல்வத்தைப் பார்க்கிற் கனாவா, மலருதிர்ந்தாற் போலிளமை வாடுஞ் - சிலநிகழ்ந்த, மின்னொக்கும் வாழ்நாளிவையிற்றை மெய்யென்றிட், டுன்னிக் களிப்பா ருளர்" பாரதம். (ஈ) "இளமையும் வனப்பு நில்லா வின்பமு நின்ற வல்ல, வளமையும் வலிது நில்லா வாழ்வுநா ணின்ற வல்ல, களமக ணேச நில்லா கைப்பொருள் கள்வர் கொள்வா, ரளவிலா வறத்தின் மிக்க தியாதுமற் றில்லை யன்றே" நரிவிருத்தம். 14. (உ) "இளமையு நிலையாவா லின்பமு நின்றவல்ல, வளமையு மஃதேயால் வைகலுந் துன்பவெள்ள, முளவென நினையாதே செல்கதிக் கென்றுமொன்று, விளைநில முழுவார்ப்போல் வித்துநீர் செய்துகொண்மின்" வளையாபதி. (ஊ) "இன்றுளா ரின்றேயு மாய்வ ரவருடைமை, யன்றே பிறருடைமை யாயிருக்கு - நின்ற, கருமத்த தல்லாத கூற்றின்கீழ் வாழ்வார், தருமந் தலைநிற்ற னன்று" அறநெறி. 111.

3. (அ) "அல்லிடை யன்றியே யலர்ந்த மாலதி, வல்லிகடருவெனு மகிழ்நர் தங்களைப், புல்லுவ பகலினும் பொருந்து மோவெனா, முல்லைகண் மலர்ந்தன முறுவல் செய்வபோல்" கந்த. இந்திரனருச்சனை. 23. (ஆ) "இடியினுங்கொடியினு மயங்கி" சீவக. 196. (இ) "இழையினுங் கொடியினு மிடியினும் பிணங்கி" பெருங். (1) 32.................

(பிரதிபேதம்) 1 நயவந்த, 2 மயக்கம்.